Browsing: விளையாட்டு

Ben Stokes: ஆல்-ரவுண்ட் நாயகன் – ஓய்வை அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!

உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி சர்வதேசப் போட்டி என்று அவர் டிரெஸ்ஸிங் ரூமில் சக வீரர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பென் ஸ்டோக்ஸ், கடந்த 15 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் அசைக்க முடியாத தூணாக விளங்கி வந்துள்ளார். பல இக்கட்டான போட்டிகளில் ஒற்றை…

தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோவை பெண் காவலர்; ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று அசத்தல்!

கோவை மாநகர காவல் துறையில் ஆயுதப்படை காவலராக கெளதமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான 64வது தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில்,  தமிழ்நாடு தடகள அணி சார்பில் பங்கேற்றார். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடம் 04.17 விநாடிகளில் கெளதமி இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.இதன் மூலம், வருகிற செப்டம்பர் மாதம் ஜப்பான் நகோயா நகரில் நடைபெற உள்ள 20 வது ஆசிய போட்டியில்…

FIFA : சூடு பறக்கும் ஆட்டமே இனிமேதான்! உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை? | Fifa world cup 2026 Knockout scenario

தொடரை நடத்தும் மெக்சிகோ, அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. குறிப்பாக மெக்சிகோ, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக நாக்-அவுட் சுற்றை உறுதி செய்தது. கடந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்த ஜெர்மனி, இம்முறை சிறப்பாகச் செயல்பட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, லயோனல் மெஸ்ஸியின் சாதனை கோல்களுடன் (18 கோல்கள்) கம்பீரமாக முன்னேறியுள்ளது. கிலியன் எம்பாப்பேவின் அபார ஆட்டத்தால் பிரான்ஸ் அணியும்,…

MrBeast & Cristiano Ronaldo: படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான உண்மை! MrBeast & Cristiano Ronaldo: An interesting fact from the shoot!

படப்பிடிப்பு முடிந்தவுடன் வேலை முடிந்தது என நான் கிளம்ப தயாரானேன். ஆனால், ரொனால்டோ என்னை விடுவதாக இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு வருமாறு ரொனால்டோ அன்போடு அழைத்தார். `நீங்கள் எனக்கு நிறைய நேரம் கொடுத்துவிட்டீர்கள், இதுவே போதும்’ என்று நான் பலமுறை கூறியும், ரொனால்டோ அதை கேட்கவில்லை.’’ என்று மனம் திறந்து நெகிழ்வாகப் பேசியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட்.இவர்களது இந்த கூட்டணியில், ரொனால்டோவின் யூடியூப் சேனலில் “I Meet MrBeast To Break The Internet!!” என்ற வீடியோவும்,…

போட்டி நேரத்தில் மட்டும் அனுமதி! மற்ற நேரங்களில் தனி அறை! ஐசிசி-யின் அதிரடி உத்தரவு! | Allowed during competition only! Private room at other times! ICC’s action order!

“தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் போட்டிக்கு முன்பும் பின்பும் ஆடை மற்றும் காலணிகளை மாற்றிக்கொள்ளும் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையையே பயன்படுத்த வேண்டும்.இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், “இது ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்ட தொடர் என்பதால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் இங்குப்…

மெஸ்ஸியின் புதிய உலக சாதனை: ஆஸ்திரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா! | Messi creates new history in fifa world cup

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி ஒரு புதிய சாதனை படைத்து, புது சரித்திரம் எழுதியுள்ளார். விறுவிறுப்பாக நடந்த உலகக்கோப்பை போட்டியில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அதிகாரப்பூர்வமாக அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடந்த இந்த முக்கியமான போட்டியில், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டாலும், பின்னர் இரண்டு சூப்பர் கோல்களை அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.…

FIFA 2026: பாஸ்டனை மாற்றிய ஸ்காட்லாந்து ரசிகர்களின் நெகிழ்ச்சியான கதை! FIFA 2026: The heartwarming story of how Scottish fans transformed Boston!

பாஸ்டனின் ஒரு அமைதியான பகுதியில் உள்ள Airbnb விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஸ்காட்லாந்து ரசிகர்கள், அதிகாலை 6.30 மணிக்குத் தங்களது பாரம்பர்ய இசைக்கருவியான பேக்பைப்பை வாசிக்கத் தொடங்கினர். சாதாரணமாக இதை ஒரு தொந்தரவாக நினைத்து அக்கம் பக்கத்தினர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மைக் மோரிசன் என்ற உள்ளூர்வாசி, அந்த இசையையும் அவர்களின் உற்சாகத்தையும் ரசித்து, அவர்களுக்கு காலை உணவாக சாசேஜ் சமைத்துக் கொடுத்து அவர்களுடன் இணைந்து கொண்டார்.ஸ்காட்லாந்து ரசிகர்கள் மைக்கை தங்கள் குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு…

மும்பை இந்தியன்ஸில் பெரும் புயல்! ஹர்திக், சூர்யகுமார் வெளியேற்றம்… புதிய சகாப்தத்தை நோக்கி MI? | Is mumbai trading Hardik in place of Jaiswal

ஐபிஎல் தொடர் முடிந்தாலும், அணிகளுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த பரபரப்புக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப் பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இருவரும் அணியிலிருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் செய்திகள், மும்பை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மும்பை அணியின் புதிய சகாப்தத்திற்கான தொடக்கமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.ஹர்திக் – என்ன காரணம்?குஜராத் டைட்டன்ஸ்…

"அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!" – 29 பந்துகளில் 94 ரன்கள்… ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி!

“பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!” என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஐபிஎல் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, மிகக் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய அணிக்காக…

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !

விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான சாஃப்ட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் மொத்தம் 20 மாணவிகள் கலந்து…

1 3 4 5 6 7 465