கோவையில் மாநகராட்சியில் 54 பேர் பணி நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?

Share

'பின்வாசல் வழியாக வந்தவர்கள்’ - கோவையில் 54 பேர் பணி நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர் நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தங்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள 54 பேர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மைப்பட்டவர்கள் என்பதால் தமிழக அரசே தங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென்கின்றனர் பணியிழக்கவுள்ள இளநிலை உதவியாளர்கள். நீதிமன்ற உத்தரவு குறித்து அரசின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் ரவி தேஜா கூறியுள்ளார்.

பணி நியமனம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ததுபோல முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று திமுக வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த நியமனத்தில் தான் எந்த குறுக்கீடும் செய்யவில்லை, பணம் எதுவும் வாங்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள வேலுமணி, திமுக ஆட்சியில் திட்டமிட்டு சிலரை தூண்டிவிட்டு வழக்குத் தொடுத்துள்ளதாகவும், நேர்காணல் கோப்புகளை திருடி, மார்க் ஷீட்டை தொலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் கடுமையான கருத்துகள்!

கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில், கோவை மாநகராட்சியில் 103 இளநிலை உதவியாளர்கள் புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, இந்த 103 பணியிடங்களில் தூய்மைப்பணியாளர், ஓட்டுநர் மற்றும் பதிவுரு எழுத்தர் போன்ற பணிகளில் இருந்த 34 பேருக்கு மூப்புரிமை அடிப்படையில் இந்த பணியிடங்கள் வழங்கப்பட்டன.

மீதமுள்ள 69 பணியிடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. மொத்தம் 654 பேர் விண்ணப்பித்ததில், 440 பேர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்றனர். கருணை அடிப்படையில் சிலர் நியமிக்கப்பட்டதுபோக, 54 பேர் புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com