Browsing: விளையாட்டு

” சிஎஸ்கே அணியுடனான பிரிவு முதலில் சற்று கடினமாக இருந்தது”- ஜடேஜா| “Separation from the CSK team was initially a bit difficult” – Jadeja

அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ஜடேஜா, “பிங்க் நிற ஜெர்ஸி எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சிவம் துபேவை எனக்கு நீண்ட நாள்களாகத் தெரியும். நெட்ஸில் அவருக்கு பந்து வீசியிருக்கிறேன். அவர் ஸ்பின்னர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு தெரியும். அதனால், பெரிய ஷாட் அடிக்க அவர் முயற்சிப்பார் என்று தெரியும்” என்று பேசியிருக்கிறார்.தொடர்ந்து சிஎஸ்கே குறித்து பேசிய அவர், “சிஎஸ்கே அணியுடனான பிரிவு முதலில் சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் அந்த அணியுடன் 12-13 வருடங்களாகப்…

RR vs CSK: "இந்த வருடம் கோப்பையை வெல்வதுதான் எங்களுடைய ஒரே இலக்கு" – கேப்டன் ரியான் பராக்

நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த ஸ்கோரை 12.1 ஓவர்களில் எட்டி பிடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்நிலையில் அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “டாஸ் வென்றது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. நாங்கள் திட்டமிட்டபடி விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. RR vs…

RR vs CSK: “எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். முதல் போட்டி என்பதால்.!”- ருதுராஜ் கெய்க்வாட்| “Our team has a lot of young players. Since it’s the first match…!” said Ruturaj Gaikwad

கிரிக்கெட்டில் சில நாட்களில் ஆடுகளம் இதுபோன்று பேட்டிங்கிற்குச் சாதகமில்லாமல் இருப்பது இயல்புதான், ஆடுகளம் சாதகமாக அமையும் போது, வீரர்கள் நிச்சயம் பெரிய ஸ்கோரை எட்ட முடியும். அதனால் இந்தத் தோல்வியைக் கண்டு நான் விரக்தியடையவில்லை. இப்போதைய “இம்பாக்ட் பிளேயர்’ விதிகளால் எது சரியான இலக்கு என்று கணிக்க முடிவதில்லை. எங்களுடைய முயற்சி பலிக்கவில்லை என்றாலும், வரும் போட்டிகளில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.ருதுராஜ் கெய்க்வாட்எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். முதல் போட்டி என்பதால் அவர்கள்…

'சீசனை தோல்வியோடு தொடங்கிய சி.எஸ்.கே!' – எப்படி வென்றது ராஜஸ்தான்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.RR vs CSKமுதன்முறை சென்னைக்காக களம் காணும் முன்னாள் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் நினைத்த படி தங்கள் ஆட்டங்களை ஆட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பவர் பிளேவிலே…

MI vs KKR: “ரோஹித் ஆடிய விதம் மற்றும் அவர் அடித்த ஷாட்கள் அபாரமானவை”- ஹர்திக் பாண்டியா| hardik pandya about rohit sharma

மைதானம் பேட்டிங்கில் சாதகமாக இருப்பதை, எதிரணி வீரர்கள் ஆடுவதை பார்த்தே தெரிந்து கொண்டோம். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்களைப் பாராட்ட வேண்டும். அவர்கள் ஆட்டத்தை நன்றாகக் கட்டுப்படுத்தினார்கள். எங்கள் அணியின் முதல் இரண்டு பேட்டர்களான ரோஹித் மற்றும் ரிக்கெல்டன் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ரோஹித் ஆடிய விதம் மற்றும் அவர் அடித்த ஷாட்கள் அபாரமானவை. அதேபோல் ரிக்கெல்டனும் அருமையாக விளையாடினார். ரோஹித் ஷர்மாஅதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷர்துல் தாக்கூரிடம் அடிக்கடி அணிகளை மாற்றியது போதும்,…

MI vs KKR: “இந்த மைதானம் எனக்கு கசப்பான மற்றும் இனிப்பான நினைவுகள் இரண்டையுமே கொடுத்திருக்கிறது “- ஷர்துல் தாகூர்| ipl 2026 MI vs KKR Shardul Thakur post match speech 2026

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக என் சொந்த மண்ணில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒரு விஷயம்.நான் 2010, 2011, 2012 சீசன்களில் இந்த அணியுடன் ஒரு நெட் பவுலராகவும், வளர்ந்து வரும் வீரராகவும் இருந்திருக்கிறேன். இங்கே சத்தமில்லாமல் பந்துவீசி என் அடையாளத்தை உருவாக்கினேன். நான் இதே அணியில் தொடர்ந்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இது என் சொந்த ஊர். இங்கு எனக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஷர்துல் தாகூர் லக்னோ அணியிலிருந்து என்னை டிரேடிங் செய்து,…

MI vs KKR: 13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வென்று அசத்திய மும்பை அணி!

13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். MI vs KKRமும்பை அணியில் ரோஹித், ஹர்திக் பாண்டியா, சூர்யா குமார் யாதவ், திலக் வர்மா, ட்ரெண்ட் போல்ட், பும்ரா, போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த அணியாக களமிறங்கினாலும், டி20 உலகக்கோப்பையின் வின்னிங் கேப்டன் சூர்யா குமார் யாதவை இம்பாக்ட் பிளேயர் ஆக களமிறக்கினர். எதிர் புறத்தில்…

'ஆடினே இருப்பேன்!' – காவ்யா மாறனின் ராஜ தந்திரங்களை உடைத்தெறிந்த ஆர்.சி.பி! – எப்படி வென்றது?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ‘எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்’ கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி அழுது உருண்டு டிக்கெட் வாங்கி அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏக்களின் சீட் நம்பர்களை ஒரு பிரிண்ட் அவுட் போட்டு ஆர்.சி.பியின் கையில் கொடுத்துவிட்டார்கள் போல!RCB vs SRHஆர்.சி.பி பேட்டர்கள் குறிவைத்து அடித்ததில் அப்படி அத்தனை பந்துகளும் கேலரியில்தான் போய் விழுந்தது. எத்தனை பேரின் மண்டை உடைந்ததோ! சன்ரைசர்ஸ் வேடிக்கை மட்டுமே பார்க்க…

IPL : RCB-க்கு அதிர்ச்சி கொடுக்குமா SRH? – 11 காலி இருக்கைகள் விடப்படும்! | In opening ipl match RCB will meet SRH

கொண்டாட்டமில்லா தொடக்கம்!வழக்கமாக ஐபிஎல் தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, ஆர்சிபி அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின்போது சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், மைதானத்தில் 11 இருக்கைகள் அவர்கள் நினைவாகக் காலியாக வைக்கப்படும் எனவும்…

“அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார்.!”- சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு | “Dhoni to miss matches for the next two weeks, announces CSK management”

அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் 2026 திருவிழா இன்று (மார்ச் 28) தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தோனி – சிஎஸ்கேஅதேபோல மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே களம் காண இருக்கிறது. இம்முறை தோனி ஓர் “இம்பேக்ட் பிளேயராக’…

1 5 6 7 8 9 442