Daily Archives: June 15, 2026

நிஷாந்த் உயிர்த்தநாதன்: ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி இளைஞரின் உடல் எங்கு உள்ளது?

பட மூலாதாரம், FSUIபடக்குறிப்பு, நிஷாந்தின் உடல் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக, ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஓமன் நாட்டு கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி உயிரிழந்தார். இதையடுத்து, அவருடைய உடல் தற்போது கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில்…

IND vs Pak: இந்தியா – பாகிஸ்தான் வீராங்கனைகளிடையே களத்தில் மோதலா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேற்று (ஜூன். 14) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது நடந்ததாக, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. அந்த வீடியோவில், பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் பிட்ச்சின் நடுவே இந்திய வீராங்கனையை தாக்குவது போன்றும், உடனே நடுவரும் மற்ற வீராங்கனைகளும் ஓடிவந்து இருவரையும் தடுத்து சமாதானப்படுத்துவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.…

‘காலி சேர்கள்…பாதியில் கலைந்த கூட்டம்…’ – தவெகவின் மதுராந்தக இணைப்பு விழா ஃபிளாப்? – அப்செட்டில் நிர்வாகிகள் |Empty Chairs, Half-Empty Venue: Was TVK’s Maduranthakam Membership Event a Flop?”

அதிமுகவை சேர்ந்த 25,000 முதல் 30,000 நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பெரிய விழா எடுத்து தவெகவில் இணைக்கிறேன் என்று கூறிதான் மரகதம் குமரவேல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆட்சியமைத்த பிறகு முதல் முதலாக பிரமாண்டமான இணைப்பு விழா என்பதால் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் உட்பட இன்னும் சில அமைச்சர்கள் என பலரும் விழாவுக்கு வர ஒத்துக் கொண்டனர். கூட்டத்தை காட்ட நிகழ்வு நடந்த மைதானத்தில் 25,000 இருக்கைகளும் போடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடவில்லை. பாதிக்கும் மேற்பட்ட…

தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி! |Deepti Sharma Stars as India Women Outclass Pakistan in a One-Sided Contest

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆரம்பமே அதிரடிதான்! இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.ஜெர்சி நம்பர் 18 களமிறங்கினாலே பாகிஸ்தான் அணியை பந்தாடுவது வழக்கமாகிவிட்டது.மந்தனாவுடன் சேர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.பேட்டிங்கில் கலக்கிய…

அமெரிக்கா – இரான் ஒப்பந்தம் பற்றி நீடிக்கும் கேள்விகளும் சவால்களும் என்ன?

பட மூலாதாரம், REUTERS/Stringer TPX IMAGES OF THE DAYபடக்குறிப்பு, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள்.கட்டுரை தகவல்அமெரிக்கா – இரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, டொனால்ட் டிரம்புக்கு மிகவும் வரவேற்கத்தக்க பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளது. இருப்பினும் இது கணிசமான அளவு நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தை தனது சமூக ஊடகப் பதிவில் அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்றும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் என்றும்…

FIFA 2026: ஆஸ்திரேலிய அணியில் களம் இறங்கி சாதனை படைத்த இந்திய வம்சாவளி நாயகன்; யார் இந்த நிஷான்?  | FIFA World Cup 2026: Tamil-Origin Hero Nishan Makes History with Australia

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டத்திலேயே ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு மாபெரும் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. சர்வதேச கால்பந்து அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட துருக்கியை, ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை மேடைக்குத் திரும்பிய துருக்கியின் கனவை உடைக்கும் வகையில், ஆஸ்திரேலிய வீரர் நெஸ்டோரி இரான்குண்டா ஒரு சூப்பர் கோல் அடித்து தனது அணியை…

சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி | Salem: Pen drive filled with nude videos of women; shocking background of TVK functionary

சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த த‌.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றிப் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு எதிராக எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கொடூரமான அத்துமீறலில் ஈடுபட்ட மணிகண்டன்…

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா – சரித்திரம் படைத்தார் தீப்தி ஷர்மா

பட மூலாதாரம், Philip Brown/Getty Imagesபடக்குறிப்பு, மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார் தீப்திபிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்பிரிட்டனின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.முதலில் பேட் செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள்…

‘போலீஸ் என்ன கண்மூடித்தனமா அடிச்சாங்க; நான் யார்ன்னு சொல்லியும்’- வங்கதேச வீரர் குற்றச்சாட்டு | Bangladesh cricketer Nayeem Hasan alleges police assault in Chattogram

இந்நிலையில் காவல்துறையினர் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயீம் ஹசன், “ஆரம்பத்தில் நான் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எனது பைகளைச் சோதிக்குமாறு கூறினேன். ஆனால், அவர்கள் திடீரென எனது கழுத்தைப் பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். வங்கதேச வீரர் நயீம் ஹசன் நான் யார் என்று பலமுறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். போலீசார் என்னை லத்திகளால் கண்மூடித்தனமாகத் தாக்கினர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோதும், அங்கிருந்த பொறுப்பு அதிகாரி…