நிஷாந்த் உயிர்த்தநாதன்: ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி இளைஞரின் உடல் எங்கு உள்ளது?

Share

நிஷாந்தின் உடல் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், FSUI

படக்குறிப்பு, நிஷாந்தின் உடல் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக, ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஓமன் நாட்டு கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி உயிரிழந்தார். இதையடுத்து, அவருடைய உடல் தற்போது கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஓமன் நாட்டின் டுக்ம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த , எம்டி செலஸ்டியல் (MT Celestial) என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்த்தநாதன் என்ற இரண்டாம் நிலை அதிகாரி, கடந்த ஜூன் 11ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஆனால், “முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும்” நிஷாந்த் உயிரிழந்துள்ளார் என நிஷாந்தின் குடும்பத்தினரும், இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எஃப்எஸ்யூஐ (FSUI)-உம் குற்றம்சாட்டுகிறார்கள்.

நிஷாந்தின் உடலைப் பாதுகாக்க போதுமான குளிரூட்டும் வசதிகள் கப்பலில் இல்லாததால், அவரது உடல் அழுகத் தொடங்கிவிட்டது என கடந்த 13ஆம் தேதி எக்ஸ் தளத்தில் எஃப்எஸ்யூஐ பகிர்ந்த காணொளி வைரலான நிலையில், அதன் பின்னரே இந்த பிரச்னை குறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தற்போது நிஷாந்தின் உடல் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com