கூடலூர்: காப்பி தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த ஆண் யானை; தீவிர விசாரணையில் வனத்துறை!

Share

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் யானைகளின் வழித்தடங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நீர்நிலைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் தவித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரும் யானைகளால் அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அதேவேளையில் மனித தவறுகளால் யானைகளும் உயிரிழந்து வருகின்றன.

யானை இறப்பு

இந்த நிலையில் கூடலூர் அருகில் உள்ள இருவயல் தனியார் காப்பி தோட்டத்தில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை உள்ளூர் மக்கள் இன்று காலை பார்த்திருக்கிறார்கள். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். யானையின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் இறப்புக்கான காரணம் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், ” யானை இறந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் கிணறு இருக்கிறது. பக்கத்திலேயே சோலார் மின் வேலியும் இருக்கிறது. மேட்டாருக்கான மின்சார ஒயரும் இருக்கிறது. இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய உடற்கூறாய்வு செய்யப்படுகிறது. விரைவில் காரணம் தெரியவரும்” என்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com