அமெரிக்கா – இரான் ஒப்பந்தம்: பாகிஸ்தானின் செயல்பாடு பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

Share

 பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்.

பட மூலாதாரம், Government of Islamabad / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்த ஆவணத்தைக் காட்டும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

100 நாட்கள் போருக்குப் பிறகு, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஒப்பந்தத்தின் மீதமுள்ள நிபந்தனைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த விவாதங்கள் அடுத்த 60 நாட்களில் நடைபெறும்.

இரு தரப்பிற்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையேயான ஒப்பந்தத்திற்கான முதல் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தானின் பங்கு உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் சர்வதேச ஊடகங்கள் இதை ஒரு பெரிய ராஜ்ஜீய வெற்றியாகப் பாராட்டுகின்றன.

பாகிஸ்தானின் பங்கு குறித்து, கட்டுரையாளர் சதானந்த் துமே அமெரிக்க நாளிதழான “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்”-இல் எழுதுகையில், “இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், குறைந்தது ஒரு நாடாவது அதை ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கும். அந்த நாடு பாகிஸ்தான். அமெரிக்கா மற்றும் இரான் இடையே ஒரு மத்தியஸ்தராக பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது?

பாகிஸ்தானின் பங்கு உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் சர்வதேச ஊடகங்கள் இதை ஒரு பெரிய ராஜ்ஜீய வெற்றியாகப் பாராட்டுகின்றன.

பட மூலாதாரம், Aamir QURESHI / AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தைக் கொண்டாடும் இஸ்லாமாபாத்தில் உள்ள விளம்பரப் பலகைகள்

“இந்த வெற்றி நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம், ஆனால் பாகிஸ்தான் உலக அரங்கில் தனக்குக் கிடைத்துள்ள இந்த புதிய முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி தனது பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com