IND vs Pak: இந்தியா – பாகிஸ்தான் வீராங்கனைகளிடையே களத்தில் மோதலா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

Share

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேற்று (ஜூன். 14) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது நடந்ததாக, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. அந்த வீடியோவில், பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் பிட்ச்சின் நடுவே இந்திய வீராங்கனையை தாக்குவது போன்றும், உடனே நடுவரும் மற்ற வீராங்கனைகளும் ஓடிவந்து இருவரையும் தடுத்து சமாதானப்படுத்துவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ind vs pak match
ind vs pak match

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நிஜமாகவே இப்படி ஒரு அசம்பாவிதம் மைதானத்தில் நடந்ததா? என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர்.ஆனால், இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று தற்போது தெரியவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த போலியான வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் மைதானத்தில் அப்படி எந்த ஒரு சண்டையோ அல்லது மோதலோ நடக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

ind vs pak match
ind vs pak match

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பரவும் எதையும் அப்படியே நம்ப முடியாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி அரைசதம், ரிச்சா கோஷின் சிறப்பான ஆட்டம் மற்றும் தீப்தி சர்மாவின் 5 விக்கெட் வீழ்த்திய சாதனை ஆகியவற்றின் உதவியுடன் இந்தியா தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாகத் தொடரைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com