அமெரிக்கா – இரான் ஒப்பந்தம் பற்றி நீடிக்கும் கேள்விகளும் சவால்களும் என்ன?

Share

அமெரிக்கா - இரான் அமைதி ஒப்பந்தம், இஸ்ரேல், டிரம்ப், பாகிஸ்தான், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், REUTERS/Stringer TPX IMAGES OF THE DAY

படக்குறிப்பு, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள்.

அமெரிக்கா – இரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, டொனால்ட் டிரம்புக்கு மிகவும் வரவேற்கத்தக்க பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளது. இருப்பினும் இது கணிசமான அளவு நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை தனது சமூக ஊடகப் பதிவில் அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்றும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் என்றும் அதில் கூறியிருந்தார்.

“எண்ணெய் பாயட்டும் !” என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கடந்த கால அமெரிக்க அதிபர்களின் தோல்விகளுக்கு நேர்மாறாக, “ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும்” கொண்டு வரும் ஒரு “சிறந்த ஒப்பந்தத்தை” தாம் உறுதி செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.

இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் டிரம்புக்கு புதிதல்ல.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com