`அல்லேரிக்கு விரைவில் சாலை வசதி’ – ஜூவி ஆக்‌ஷன் ஸ்டோரி… மலைவாழ் மக்களிடம் ஆட்சியர் உறுதி! | road connectivity for alleri soon – junior vikatan action story – collector assures tribal residents

Share

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அல்லேரிக்குச் செல்ல வேண்டுமானால், அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான காட்டுவழி மண்பாதையில் பயணிக்க வேண்டும்.

அல்லேரியைத் தாண்டிலும், ஆங்காங்கே மலை இடுக்குகளில் சுருட்டியன்கொல்லை, அத்திமரத்துக்கொல்லை, ஆட்டுக்கொந்தாரை, பலாமரத்துக்கொல்லை, நெல்லிமரத்துக்கொல்லை, அவுசேரி ஓடை, கரப்பனான்கொல்லை, ஜடையன்கொல்லை, ஏரிக்கொல்லை, பங்களாகொல்லை, மருதவல்லிமேடு, பெரியதட்டாங்குட்டை என 12-க்கும் மேற்பட்ட சிறு சிறு குக்கிராமங்களும் இருக்கின்றன.

இங்கெல்லாம், இரண்டாயிரத்துக்கு அதிகமான மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி

ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி

இவர்களின் வாழ்க்கை, பெருமளவு வெளிச்சத்துக்கு வராமலேயே புதைந்துகிடக்கிறது. `சாலை வரும்… வாழ்க்கை மாறும்’ என்று காத்திருந்தே பல உயிர்களை இழந்துவிட்டார்கள் அல்லேரி மக்கள்.

மலையிலிருந்து கீழே இறங்குவதற்கு சாலை வசதியில்லாததால், கர்ப்பிணிகளை `டோலி’ கட்டித் தூக்கிக்கொண்டு இறங்கும் வேதனை இன்றும் தொடர்கிறது. இரவு நேரமானால், தீப்பந்த வெளிச்சம் மட்டுமே வழித் துணை. அடிவாரத்தை அடைவதற்குள் பனிக்குடம் உடைந்து குழந்தையும் பிரசவித்துவிடுகிறது.

இப்போதெல்லாம், 108 ஆம்புலன்ஸுக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு அடிவாரத்தில் வந்து தயாராக நிற்பதால், தாய் – சேய் ஆபத்தான கட்டத்துக்குச் செல்வதிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com