செளதி இரானுடன் போரை விரும்பாவிட்டாலும் 10 மடங்கு விலையில் டிரோன் வாங்குவது ஏன்?

Share

1990 வளைகுடாப் போரின்போது குவைத் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த செளதி வீரர்கள் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1990 வளைகுடாப் போரின்போது குவைத் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த செளதி வீரர்கள் (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கடந்த மாதம் தைவானில் இருந்து டிரோன்களை அதிக அளவில் வாங்கிய நாடாக செளதி அரேபியா உருவெடுத்துள்ளது.

அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, செளதி அரேபியா சாதனை அளவில் டிரோன்களை வாங்கியதுடன், பிற நாடுகளை விட ஒவ்வொரு டிரோனுக்கும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலையும் செலுத்தியுள்ளது.

கடந்த வாரம் தைவான் நிதியமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, செளதி அரேபியா 4 கோடியே 72 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான டிரோன்களை வாங்கியுள்ளது.

ஜூன் 2023 முதல் கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி, ஒரு மாதத்தில் ஒரு நாடு மேற்கொண்ட மிகப்பெரிய டிரோன் கொள்முதல் இதுவாகும்.

ப்ளூம்பெர்க் தனது செய்தியில், “செளதி அரேபியா இந்த டிரோன்களை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தவுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவற்றின் சராசரி எடை 7 முதல் 15 கிலோகிராம் வரை இருக்கும். இவை தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், ராணுவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com