தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சென்னை சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக (A2) சங்கத்தின் பொருளாளரான…





