ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகள்… கூந்தலை வளர்க்குமா, பாதிக்குமா? | Hair extension procedures… do they promote hair growth or result in damage?
முதல் விஷயம், நீங்கள் செய்துகொள்கிற ஹேர் எக்ஸ்டென்ஷன் ரொம்பவும் இறுக்கமாக, அசௌகர்ய உணர்வைத் தருவதாக இருக்கக்கூடாது. கூந்தலுக்குப் போகிற ரத்த ஓட்டத்தைத் தொந்தரவு செய்யும்படி இருக்கக்கூடாது. சிலவகை ஹேர் எக்ஸ்டென்ஷன்கள், “ஸ்டிக் ஆன்’ டைப்பில், அதாவது ஒட்டி எடுக்கும் விதத்தில் வருகின்றன. அவற்றை உபயோகித்துவிட்டு, அகற்றும்போது, மண்டைப்பகுதியில் புண்கள், கட்டிகள் போன்றவை வரக்கூடாது. பயன்படுத்தப்படுகிற பசையானது தரமாக இருக்க வேண்டும். அலர்ஜியை ஏற்படுத்தக்கூடாது.சில வகை ஹேர் எக்ஸ்டென்ஷன்களில் குட்டிக்குட்டி மணிகள் போன்று முடியோடு சேர்த்துக் கோத்தது போல செய்யப்படும். அப்படிச் செய்யும்போது, அது உங்கள் முடியை இழுக்கும் படி இருக்கக்கூடாது. அப்படியிருந்தால்…








