Doctor Vikatan: மலம் கழிக்கும்போது ரத்தம்… புற்றுநோய் அறிகுறியாக இருக்குமா? |Doctor Vikatan: Is bleeding in the stool a sign of cancer?
வேளா வேளைக்கு, சத்தான, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவோருக்கு குடல், இரைப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. அந்த ஒழுக்கம் மீறப்படும்போதுதான் செரிமான பாதிப்புகள் வருகின்றன. பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயு வெளியேறுவது, வயிற்றுப்போக்கு என செரிமானம் தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தக்கூடாது. உணவுக்குழாய் தொடர்பான புற்றுநோய்க்கு பிரதான காரணமே முறையற்ற உணவுப்பழக்கம்தான். வருடக்கணக்கில் உப்பிலும் எண்ணெயிலும் ஊறும் ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை நிச்சயம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உணவுக்குழாய் தொடர்பான புற்றுநோய்க்கு பிரதான…