Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதில் மென்மையான பெண் குரல்; இதை சிகிச்சையால் சரி செய்ய முடியுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதாகிறது. அவனுக்கு குரல் மிக மென்மையாக, பெண் தன்மையுடன் இருக்கிறது. இதனால் நண்பர்கள் மத்தியில் கிண்டல், கேலிக்கு உள்ளாகிறான். தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். இதை சிகிச்சையில் சரி செய்ய முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகாகாது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகாபியூபர்ஃபோனியா (Puberphonia)ஒருவரின் குரலின் தன்மை என்பது அவரது குரல் நாணின் நீளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் மகனுக்கு இருப்பதாகச் சொல்லும் இந்தப் பிரச்னைக்கு மருத்துவத்தில் ‘பியூபர்ஃபோனியா’ (Puberphonia)…

ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா, யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? | Is protein powder necessary for everyone who works out?

அதாவது ஒருவரது தினசரி உணவில் சிக்கன், முட்டை, மீன், பருப்பு வகைகள், டோஃபு போன்றவை  போதுமான அளவு இடம்பெற்றால், புரதக் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. உணவுகள் தாண்டி, புரோட்டீன் சப்ளிமென்ட்டும் எடுக்க வேண்டாம். சிலருக்கு  சரியான நேரத்துக்கு, சரியாகச் சாப்பிட முடியாமல் போகலாம். சாப்பிடாமலேயே இருப்பதற்கு பதில், புரோட்டீன் பவுடர் குடிப்பது அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும்.  அதேபோல சைவ உணவுக்காரர்கள், வீகன் உணவுப்பழக்கமுள்ளோருக்கெல்லாம் உணவின் மூலம் போதுமான புரோட்டீன் கிடைக்காதபோதும், புரோட்டீன் பவுடர் உதவும். பாடி பில்டர்களுக்கும் இது அவசியமாகலாம். வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும்…

50 வயதாகிறது. பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

மெனோபாஸின் பிரதான அறிகுறியாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். சினைமுட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டுவித ஹார்மோன்கள் சுரக்கும். இதில் ஈஸ்ட்ரோஜென் என்பது பிரதான பெண ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது பெரிமெனோபாஸ் காலத்தில் சமநிலையின்றி அதிகரிக்க ஆரம்பிக்கும்.அதாவது உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும்.  இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம்  அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக…

Doctor Vikatan: விபத்துக்குப் போட்ட TT ஊசி; நாய்க்கடிக்கும் அதுவே போதுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் முன்பு சிறிய விபத்து ஏற்பட்டது. உடனே டிடி ஊசி போட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் நாய் கடித்தது. அதற்கும் டிடி ஊசி போடச் சொன்னதால் போட்டுக் கொண்டேன். ஆனால் அதன் பிறகுதான், ஏற்கெனவே டிடி போட்டதால் மறுபடி தேவையில்லை என்று சிலர் சொன்னார்கள்.டிடி ஊசி என்பது என்ன? அதை எப்போதெல்லாம், எந்த இடைவெளியில் போட்டுக் கொள்ள வேண்டும்? இருமுறை போட்டதால் எனக்கு ஏதேனும் பிரச்னை வருமா? டிடி ஊசியே,…

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலோ, அளவுக்கு அதிகமாக குடித்தாலோ வாந்தி உணர்வு ஏற்படுகிறது. -தீர்வு என்ன?

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டு போகும், உதடுகள் வெடிக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.எனவே, தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்பதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பது நல்லது.நீங்கள் குறிப்பிட்டதுபோல, வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டல், வாந்தி உணர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, புதினா இலைகளுடன் குடிக்கலாம்.நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு…

நான் 40 வயது பெண்; 18 வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை, இனி சாத்தியம் இருக்கிறதா?

உங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்குமானால், முதலில் கருத்தடை முறைகளை நிறுத்த வேண்டும்.  கருத்தடை முறையை நிறுத்தினால்தான் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு மீண்டும் நிகழும். அதன் பிறகு கருத்தரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகும். உங்கள் கணவரின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. உங்களுக்கு 40 வயது என்பதால் ஒவேரியன் ரிசர்வ் எனப்படும் முட்டை இருப்பு குறைந்துகொண்டே வரும். அதை ‘ஏ.எம்.ஹெச்’ (Anti-Mullerian Hormone) எனப்படும் டெஸ்ட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  அதை வைத்து உங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக…

Doctor Vikatan: சில மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன்?

அந்த வகையில் கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது. எதை, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அப்போதுதான் எடுக்க வேண்டும். சர்க்கரைநோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்தில் ஒன்றை, உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்வோம். ஒரு வாய் உணவு சாப்பிட்டு, உடனே மாத்திரையை எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு சாப்பிடச் சொல்வோம். அந்த வகையில் உணவுக்கும் மருந்துகளுக்கும் தொடர்புண்டு.கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது.உங்களுக்கு ஏற்கெனவே அல்சர் மாதிரி வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள்…

Doctor Vikatan: கண்களில் ஸ்ட்ரோக் வர என்ன காரணம்? – மருத்துவர் விளக்கம்

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடலியக்கம் இல்லாத வாழ்க்கைமுறை போன்றவை, கண்களில் ஸ்ட்ரோக் வருவதற்கான ரிஸ்க் காரணிகள்.ரெட்டினா எனப்படும் விழித்திரையில் இருந்து  தகவல்கள் புராசெஸ்  செய்யப்பட்டு, பார்வை நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் வழியே மூளைக்கு அனுப்பப்படும். மூளையில் உள்ள ‘ஆக்ஸிபிட்டல் கார்டெக்ஸ்’ (occipital cortex)  என்ற இடத்துக்குப் போய்தான் தகவல்கள் புராசெஸ் செய்யப்படும். கண் மருத்துவம்ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடை ஏற்படும்போது அதற்கேற்ப, பார்வை மங்குதல், தசைகள் முடங்கிப்போவது, பார்வை இரண்டிரண்டாகத் தெரிவது, ஏதேனும் மிதப்பது போல…

Doctor Vikatan: கண்களில் Cataract; அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு தீர்வுகள் உண்டா?

குறிப்பாக இவர்களுக்கு இரவில் பார்வையில் தெளிவு இருக்காது. விளக்கு வெளிச்சத்தில்கூட பார்வை தெளிவாகத் தெரியாது. விளக்கைச் சுற்றிலும் அலைஅலையாகத் தெரியலாம். நிறங்கள் பளிச்செனத் தெரியாமல், அவையும் மங்கலாகத் தெரியும். ஏற்கெனவே கண்ணாடி அணிந்தவர் என்றால், கண்புரை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாவதன் காரணமாக, அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும். ஏர்லி (early) கேட்டராக்ட், இம்மெச்சூர் (immature ) கேட்டராக்ட், மெச்சூர் (mature) கேட்டராக்ட் மற்றும் ஹைப்பர்மெச்சூர் (hypermature) கேட்டராக்ட் என கண்புரை பாதிப்பில் நிறைய ஸ்டேஜ் உண்டு. இவற்றில் ஏர்லி கேட்டராக்ட் இருந்தால் உடனடியாக அறுவைசிகிச்சை தேவையில்லை. சம்பந்தப்பட்ட…

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு ஃபிட்ஸ், வளர்ந்த பிறகும் தொடருமா?

Doctor Vikatan: என் 6 மாதக் குழந்தைக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வருகிறது. காய்ச்சலும் வருகிறது. பிறந்த குழந்தைக்குமா ஃபிட்ஸ் வரும். இது பின்னாளில் அவன் வளர்ந்த பிறகும் தொடருமா, குழந்தை வளர்ந்ததும் பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் இருக்குமா, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் கொடுக்க வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் சஃபி.குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னையை, மருத்துவ மொழியில் ‘ஃபிப்ரைல் சீஷர்ஸ்’ (Febrile seizures) என்று சொல்வோம். பிறந்த குழந்தைகளுக்கு…