Doctor Vikatan: திடீரென குறைந்த உடல் எடை… சிறுதானிய உணவுப்பழக்கம்தான் காரணமா? | Can a millet based diet cause sudden weight loss?
அதுவே எடை குறையத் தேவையில்லை என்போர், உணவு இடைவேளைகளில் பழங்கள், ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள், நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டும். என்றோ ஒருநாள் கல்யாணம், விருந்து, விசேஷங்களில் அதிகம் சாப்பிடுவதில் தவறில்லை. அதை அடிக்கடி பழக்கப்படுத்திக் கொள்ளாமல், பேலன்ஸ்டு உணவாகச் சாப்பிட வேண்டும். பாரம்பர்ய அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளை உண்பதால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். எலும்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக, ஆக்டிவ்வாக இருக்கும்.…