தெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல் – என்ன நடக்கிறது?

Share

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், சௌதி அரேபியா, வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Reuters

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட இரான் முழுவதும் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து இரு நாடுகளும் பரவலாக தாக்குதலைத் தொடர்கின்றன.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குள்ள ராணுவ தளங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்துகிறது. பஹ்ரைனில் அமெரிக்க விமானப்படை தளத்தின் முக்கிய கட்டளை தலைமையகம் இரான் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சௌதியில் உள்ள அமெரிக்க தூதரகம் டிரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஜோர்டானில் அமெரிக்க தூதரகப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு ‘விரைவில்’ பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

கேபிள் நெட்வொர்க்கான நியூஸ் நேஷனின் செய்தியாளர் ஒருவர், “இரானுக்குள் துருப்புகளை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்” என்றும் டிரம்ப் தன்னிடம் கூறியதாக எக்ஸ்-இல் பதிவிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com