Browsing: ஆரோக்கியம் | Health

வெயிலில் சென்றால் உடனே தலைவலி வருவது ஏன்… தவிர்க்க என்ன வழி? | Why does a headache occur immediately after going out in the sun? What is the way to avoid it?

வெப்பம் அதிகமாக இருக்கும்போது, மூளையின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதன் மூலமாகவும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, மிக அதிக வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருக்கும் சூழலில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலமாக வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கும் உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் (Protection mechanism) செயலிழந்து போகலாம். அந்த நேரத்தில், உடலின் உட்பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் (Deeper blood vessels) விரிவடைந்து, அதன் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதாலும்…

பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாதா? | Will eating fruits with meals cause indigestion?

“இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (IBS) அல்லது சென்சிட்டிவ்வான குடல் பாதிப்பு (sensitive gut) உள்ள சிலருக்கு, உணவோடு சேர்த்து பழங்களைச் செரிப்பது கடினமாக இருக்கும். இது வயிற்றில் பழங்கள் நொதித்துப்போக (ferment) வழிவகுத்து, வயிற்று உப்புசம் அல்லது  வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.  அதிக கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) உள்ள உணவோடு பழங்களையும் சேர்த்துச் சாப்பிடுவது, அந்த உணவின் கிளைசெமிக் குறியீட்டை (Glycemic index) அல்லது கிளைசெமிக் சுமையை (Glycemic load) அதிகரிக்கலாம்.  அதாவது, சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக…

ஓவராகச் சாப்பிட்டாலும் சிலருக்கு மட்டும் உடல் எடை ஏறாதது ஏன்? | Why some people don’t gain weight even after eating a lot?

சிலருக்கு இயற்கையிலேயே இந்த வளர்சிதை மாற்றம் மிக அதிகமாக (High Metabolic Rate)  இருக்கும். இவர்களது உடல், சாப்பிடும் உணவை மிக எளிதாக எரித்துச் செலவழித்துவிடும். இதன் காரணமாக, அவர்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. இது அவர்களுடைய உடலின் தனித்துவமான வாகு அல்லது அமைப்பு. இப்படிப்பட்டவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடனே ஜீரணமாகி, கலோரிகள் எரிக்கப்படுவதால் அவர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.இன்னொரு புறம், சிலருக்கு உணவைப் பார்த்தாலே உடல் எடை கூடுவது போன்ற உணர்வு…

ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா… எடை குறையுமா? | Is a ripped physique possible by taking steroids… Will it reduce weight?

பாடிபில்டிங் போட்டிகளுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இதனைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில், உடல் அவ்வளவு கட்டுக்கோப்பாகவும், தசைகள் தெளிவாகவும் (Ripped) தெரிய வேண்டும் என்றால், அவர்கள் இது போன்ற உணவுகளை  (External Substances) எடுத்துக்கொள்வது  அவர்களுக்கு அவசியமாகிறது. பாடி பில்டர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்கள், அறிவியல்பூர்வமாக, இதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், பாடி பில்டரின்  உடலுக்குள் ஒரு அனபாலிக் ஸ்டீராய்டு சென்றாலும், பாடி பில்டிங் போட்டிகள் முடிந்த பிறகு அதனை உடலிலிருந்து வெளியேற்றும் “ஃபிளஷிங் அவுட்’ (Flushing Out) என்ற…

Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன். மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்பழங்காலத்திலிருந்தே…

Doctor Vikatan: டீன் ஏஜிலேயே எட்டிப் பார்க்கும் நரைமுடிகள்… ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: இந்தக் காலத்தில் டீன் ஏஜிலேயே பல பிள்ளைகளுக்கும் நரை முடிகள் அதிகரிப்பதைப் பார்க்கிறோம். இது இளநரை என்றும் ரிவர்ஸ் செய்துவிடலாம் என்றும் சொல்கிறார்களே…. டீன் ஏஜில் ஏற்படுகிற நரை முடிப் பிரச்னைக்கு என்ன காரணம்…. இதை உணவு, இயற்கை வழிகளில் சரி செய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, கூந்தல் சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்ஹேர் ஃபாலிக்கிள் எனப்படும் கூந்தலின் நுண்ணறைகளில் உள்ள மெலனோசைட்ஸ் எனும் செல்கள் மெலனின்…

Doctor Vikatan: சம்மரில் கூந்தலைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? தினமும் தலைக்குக் குளிக்கலாமா?

Doctor Vikatan: சம்மர் நாள்களில் சருமப் பராமரிப்பைப் போலவே, கூந்தல் பராமரிப்பும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. வியர்வை, அதனால் உண்டாகும் வாடை, முடி உதிர்வது என இந்த நாள்களில் நிறைய பிரச்னைகள் வருகின்றன. சம்மரில் கூந்தல் பராமரிப்புக்கு என்ன செய்யலாம்… தினமும் ஷாம்பூ உபயோகித்துத் தலைக்குக் குளிப்பது சரியானதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகியல் ஆலோசகர் கீதா அஷோக். கீதா அஷோக்தலையில் அதிகப்படியான வியர்வை படிவதால் வேர்க்கால்களில் உப்பும், அழுக்கும் படிந்து விடும். மேலும், நீர்ச்சத்து குறைந்து விடுவதால் முடி…

கோடைக்காலம்: கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா அதீத வெயில்? | Summer Season: Will extreme heat affect the unborn baby?

மிக அதிக வெப்பமான சூழலுக்கு வெளிப்படும்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் விளைவாக தலைச்சுற்றல், வாந்தி, களைப்பாக உணர்வது போன்ற அறிகுறிகள் வரலாம். இதைத் தவிர்க்க அவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 3 லிட்டராவது குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள், இளநீர், மோர் போன்று குடித்து உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.வெப்ப அலை வீசும்போதும், உச்சி வெயிலின் போதும், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை…

குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, உருளைக்கிழங்கு சேர்த்துக்கொடுத்து கலோரிகளை பேலன்ஸ் செய்யலாம். உருளைக்கிழங்கை நீங்கள் எந்த வடிவில் சமைத்துக்கொடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது.  ஃப்ரென்ச் ஃப்ரைஸைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதற்கு பதில் உருளைக்கிழங்கை வேகவைத்து அதை கட்லெட் போல செய்து கொடுக்கலாம்.நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது. ஃப்ரென்ச் ஃப்ரைஸை தவிர்த்துவிடுவது…