வந்தே மாதரம் மசோதா என்றால் என்ன? பாடலை அவமதித்தால் என்ன தண்டனை?

Share

திமுக எம்பி கனிமொழி

பட மூலாதாரம், Sansad

படக்குறிப்பு, திமுக எம்பி கனிமொழி
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதமான ஜன கண மனவுக்கு இருப்பதைப் போன்ற சட்டப் பாதுகாப்பை வழங்கும் தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை செய்வதைத் தடுக்கும் (திருத்தம்) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 30) மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஆனால் இந்த மசோதாவை கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் மத்திய அரசு அவமதிக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் தெரிவித்தார்.

வந்தே மாதரம் மசோதா மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய அவர், இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதுடன், மதச்சார்பின்மைக்கும் முரணானது என்றார்.

“தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநில மொழிகளில் உள்ள பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்த மசோதா மூலம் தமிழர்களையும் பிற மொழி பேசும் மாநில மக்களையும் இந்த அரசு அவமதிக்கிறது” என்று அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com