குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

Share

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, உருளைக்கிழங்கு சேர்த்துக்கொடுத்து கலோரிகளை பேலன்ஸ் செய்யலாம்.

உருளைக்கிழங்கை நீங்கள் எந்த வடிவில் சமைத்துக்கொடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது.  ஃப்ரென்ச் ஃப்ரைஸைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதற்கு பதில் உருளைக்கிழங்கை வேகவைத்து அதை கட்லெட் போல செய்து கொடுக்கலாம்.

நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது.  ஃப்ரென்ச் ஃப்ரைஸை தவிர்த்துவிடுவது நல்லது.

நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது. ஃப்ரென்ச் ஃப்ரைஸை தவிர்த்துவிடுவது நல்லது.
Pixabay

உருளைக்கிழங்கை விரும்பும் குழந்தைகளுக்கு அதை ஒரேயடியாகத் தவிர்க்காமல் சமையலில் சின்னச் சின்ன மாறுதல்களைப் பின்பற்றி பேலன்ஸ் செய்யலாம். உதாரணத்துக்கு, ஸ்டஃப்டு சப்பாத்தி செய்துகொடுக்கலாம்.

அதில் உருளைக்கிழங்குடன் வெந்தயக்கீரையோ அல்லது காய்கறிகளோ கலந்து செய்து கொடுக்கலாம். உருளைக்கிழங்குடன் இப்படி காய்கறிகள், கீரைகள் கலந்து கொடுத்து பழக்கும்போது உருளைக்கிழங்கின் சுவை இருக்கும் திருப்தியில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

மற்ற காய்கறிகளும் சாப்பிட்டால்தான் உருளைக்கிழங்கு செய்து கொடுப்பதாகச் சொல்லுங்கள். குழந்தைகள் மெள்ள மெள்ள மாறுவார்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com