Soap அல்லது Syndet bar… சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்? | Soap or Syndet bar… which is better for the skin and why?
சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும் டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.இவையெல்லாம் சேர்க்கப்பட்ட சோப்பை பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள “ஆசிட் மேன்ட்டில்’ (Acid mantle) எனும் மெல்லிய கொழுப்புப் படலம் நீக்கப்படுகிறது. இதில் சீபம், நுண்ணுயிர்…









