Browsing: ஆரோக்கியம் | Health

தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை… மருத்துவ குணம் மிக்கதா? | The Kalyanama Murungai (Indian Coral Tree) that grew naturally in my garden… does it have medicinal properties?

ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும்.கல்யாண முருங்கைக்கீரை மதுரையில்  மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து  ‘கல்யாண முருங்கை வடை’ அல்லது ‘முள் முருங்கை வடை’ …

Soap அல்லது Syndet bar… சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்? | Soap or Syndet bar… which is better for the skin and why?

சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும்  டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமிக்கல்கள்   சேர்க்கப்படுகின்றன.இவையெல்லாம் சேர்க்கப்பட்ட சோப்பை பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள “ஆசிட் மேன்ட்டில்’ (Acid mantle) எனும் மெல்லிய கொழுப்புப் படலம் நீக்கப்படுகிறது. இதில் சீபம், நுண்ணுயிர்…

கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா…. எல்லோரும் குடிக்கலாமா? | Will drinking aloe vera juice cause a cold? Can everyone drink it ?

கற்றாழையின் மேல் தோலைச் சீவிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல் போன்ற சோற்றுப் பகுதியை எடுக்க வேண்டும். அந்தச் சோற்றுப் பகுதியை ஓடுகின்ற குழாய் நீரில் (running tap water) நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில், அதிலிருந்து வடியும் ஒருவித பால் போன்ற திரவம் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். அதைச் சாப்பிடக்கூடாது.  கற்றாழையின் பிசுபிசுப்புத் தன்மை போகும்வரை நன்கு கழுவிவிட்டு, பின் அந்தச் சோற்றுப் பகுதியை மிக்சியில் அடித்துச் சாறாகக் குடிக்கலாம். கற்றாழைச் சாறு பருகுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்…

வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு… இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா? | Infection and heart attack just from a pet dog’s lick… Is it really possible for something like this to happen?

Doctor Vikatan: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவரின் கை மற்றும் கால்களில் உள்ள திசுக்கள் ரத்த ஓட்டம் இன்றி அழுகத் தொடங்கியதால், கைகளையும் கால்களையும் அகற்றியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா… வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நக்கினாலும் தொற்று பரவுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு…

செல்லப் பிராணிகள் வளர்த்தால் அலர்ஜி வருமா… நோய் எதிர்ப்பாற்றல் கூடுமா? | Does raising pets cause allergies, or does it boost immunity?

விலங்குகளுடன் இருக்கும்போது உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால் மட்டுமே, அவற்றை வளர்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.  கர்ப்பிணிகளிடம், செல்லப்பிராணிகளின் கழிவுகளைச் சுத்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்படுமே தவிர, செல்லப்பிராணிகளை வளர்க்கவே கூடாது என்று எந்த மருத்துவரும் பொதுவாகச் சொல்வதில்லை. மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே நாம் வளர்ப்புப் பிராணிகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அதையும் தாண்டி, அலர்ஜிக்கு உள்ளாகிறவர்கள், அவற்றிடம் இருந்து விலகித்தான் இருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளில், பரவலாகப் பலருக்கும், பூனை வளர்ப்பதால் அலர்ஜி ஏற்படும். அந்நிலையில்…

டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் – எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) இணைந்து நடத்திய ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் சர்க்கரைநோயைக் கண்டறிய ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி மற்றும் வெறும் வயிற்றுச் சர்க்கரை பரிசோதனையை (Fasting) மட்டும் நம்பியிருப்பது, ஒருவருக்கு நோய் இருப்பதைக் கண்டறிவதில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை தாமதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.ஹெச்பிஏ1சி பரிசோதனை மூலம் கிட்டத்தட்ட 50 சதவிகித சர்க்கரை நோயாளிகளைக் கண்டறிய முடியாமல் போகிறது. இந்தியர்களின்…

சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்… இளமைத் தோற்றம் தருமா? | Do the peel-off masks trending on social media really provide a youthful appearance?

இளமையான தோற்றத்தைப் பெற பீல் ஆஃப் மாஸ்க்குக்கு (Peel-off masks) பதில், தரமான ‘ஓவர்நைட் ஸ்லீப்பிங் மாஸ்க்குகளை’ (sleeping masks) தேர்ந்தெடுங்கள். கூடவே, சருமம் வறண்டு போகாமல் போதுமான நீர்ச்சத்துடன் (hydration) வைத்திருப்பது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் ஸ்கிரின் உபயோகிப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுடையது சென்சிட்டிவ் சருமமாக  (sensitive skin) இருந்தாலோ, ரோசாசியா (rosacea), எக்ஸீமா (eczema), முகப்பரு பிரச்னைகள் இருந்தாலோ, பீல்-ஆஃப் மாஸ்க்குகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது.சருமம் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க, முறையான சருமப் பராமரிப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். முகத்தை…

Doctor Vikatan: மெனோபாஸ் வந்துவிட்ட எல்லாப் பெண்களுக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா? 

Doctor Vikatan: என் வயது 50. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. எப்போதும் களைப்பு, தூக்கம், எதிலும் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகளை உணர்கிறேன். மெனோபாஸ் வந்துவிட்டாலே சத்து மாத்திரைகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்தப் பிரச்னைகள் வராது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா? அப்படியானால் நான் எப்படிப்பட்ட சத்து மாத்திரைகளை எடுத்தக்கொள்ள வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்மெனோபாஸில் (menopause) அடிப்படையான சில சப்ளிமென்ட்ஸ்…

வலி அதிகரிக்கும்போது மயக்கம் வருவது, சுயநினைவை இழப்பது நடக்குமா? | Does fainting or losing consciousness happen when the pain increases?

அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அதீத வலி, விபத்துகள், சிறுநீரகக் கல் வலி, முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் கடுமையான தலைவலி, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம், அதிகப்படியான பயம் மற்றும் தூக்கமின்மை, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவற்றால் இப்படி ஏற்படலாம்.அதிக வலி ஏற்படும்போது மூளையிலிருந்து வரும் வேகஸ் நரம்பு (Vagus Nerve) தூண்டப்படுகிறது. இதனால் இதயத்துடிப்பு மெதுவாகி, ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும்…

டாக்டர் விகடன்; தொடர் கருச்சிதைவு… Blood thinner மருந்துகள் உதவுமா? | doctor vikatan Recurrent Miscarriage… Do blood thinner medications help?

கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும். இந்த ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.த்ரோம்போஃபிலியா (Thrombophilia) எனப்படும் பிரச்னை, அதாவது ரத்தம் எளிதில் உறையக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். இதனால் நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, குழந்தைக்கு வளர்ச்சித் தடை (IUGR) அல்லது கருவிலேயே குழந்தை இறந்துபோவது (IUD) போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.ஆன்டி-பாஸ்போலிபிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம் (APS) எனப்படும் தற்காப்பு மண்டலக் குறைபாடு (Autoimmune…

1 2 3 212