’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா?’ – செங்கோட்டையன் விளக்கம் | Sengottaiyan explains whether the name has been changed to Tamil Nadu Social Justice Progressive Alliance
ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்கக்கூடாது என மிரட்டுகின்றீர்களா என்ற கேள்விக்கு, “இந்த மாதிரி எல்லாம் கேட்கக்கூடாது. யாரையும் மிரட்டவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். சூலூர் பகுதியில் நடந்த குற்றத்திற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது நாங்கள் மிரட்டும் தொனி எங்களிடம் கிடையாது. நாங்கள் சாப்ட் நேச்சர். எங்கள் தொனி எதுவும் மாறவில்லை. முதல்வர் படிப்படியாகச் செய்து கொண்டு இருக்கின்றார். அதற்கு ஒரு டைம் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம்…









