நயீம் மூசா: விஜய் பாதுகாவலர் பற்றிய விவாதம் ஏன்? முதலமைச்சர் பாதுகாப்பில் பின்பற்றப்படுவது என்ன?

Share

TVK, Vijay, CM, NayeemMoosa, Bouncer,

பட மூலாதாரம், NayeemMoosa/Instagram

படக்குறிப்பு, முதலமைச்சர் விஜய்யுடன் அவரது தனியார் பாதுகாப்பு அதிகாரி நயீம் மூசா

    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முதலமைச்சரான பிறகும் விஜய் பயணிக்கும் அனைத்து இடங்களிலும் தனியார் பாதுகாவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கட்சி தொடங்கிய காலம் முதல் பொதுவெளியில் தோன்றும்போது தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் சூழவே வருகை தந்தார் விஜய்.

தேர்தல் பரப்புரையின்போது விஜய்யின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகும் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளே அவரது பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்தனர்.

விஜய்யின் பாதுகாப்பில் நயீம் மூசா என்பவர் தனி கவனம் எடுத்துக்கொள்வது தவெக தொண்டர்களைக் கூர்ந்து கவனிக்க வைத்தது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்திலும் நயீம் மூசாவுக்கு மேடையில் இருக்கை வழங்கப்பட்டிருந்தது. இது விவாதத்துக்குள்ளானது.

அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், ‘பாதுகாவலர்’ என்ற பெயரில் முதலமைச்சரின் நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்புடையதா என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை விமர்சித்துள்ளார். மாநில காவல்துறையினர் வழங்கும் பாதுகாப்பில் முதலமைச்சருக்கே நம்பிக்கை இல்லையா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com