இலங்கை முதியோர் இல்ல தீ விபத்து – 12 பேர் பலியான சம்பவத்தில் இதுவரை தெரிந்தது என்ன?

Share

முதியோர் இல்லத்தை நடத்தி வந்த லொக்கு ஐயா என அழைக்கப்படும் இசுரு அனுஷ்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, முதியோர் இல்லத்தை நடத்தி வந்த லொக்கு ஐயா என அழைக்கப்படும் இசுரு அனுஷ்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இலங்கையின் ஹொரணை – அங்குருவாதோட்டை – படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இசுரு அனுஷ்க என்ற நபரினால் இந்த முதியோர் இல்லம் நடாத்தி செல்லப்பட்டுள்ளதுடன், அந்த நபர் போலீஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 11ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த முதியோர் இல்லத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை என்ன தெரியும்?

இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 12 பேர் பலி

அங்குருவாதோட்டை – படகொட பகுதியிலுள்ள ‘மவ்பிய சேவன சேனேஹசே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் நேற்று (03) பிற்பகல் பாரிய தீ பரவலொன்று ஏற்பட்டது.

இந்த தீ விபத்து தொடர்பில் தமக்க மாலை 5.59 அளவில் தகவல் கிடைக்கப் பெற்றதாக ஹொரணை தீயணைப்பு பிரிவு பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com