‘நேரத்தை வீணடிக்காதீர்கள்’ – போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அவசர விசாரணைக்கு தலைமை நீதிபதி மறுப்பு

Share

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டக்காரர்களான மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துவிட்டார்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று காலை மழையிலும் போராட்டக்காரர்கள் தார்பாலின் கூரை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ 16 மெட்ரோ ரயில்நிலையங்களை மூடியுள்ளது.

இதற்கிடையே காக்ரோச் ஜனதா கட்சி போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

செவ்வாய்க்கிழமை மாலையில் சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆகியோரும் ஜந்தர் மந்தர் சென்று போராட்டக்காரர்களை சந்தித்தனர்.

இதனிடையே, நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு என, தமிழகத்தின் ஆளும் கட்சி அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் அடுத்த உத்தரவு வரும் வரை 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) புதன்கிழமை காலை 16 மெட்ரோ நிலையங்களை மூடுவதாகத் தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com