அர்ஜென்டினா அணிக்கு புதிய சிக்கல்: 4 வீரர்கள் மீது ஃபிஃபா நடவடிக்கை பாயுமா?

Share

ஆர்ஜெண்டினா, ஸ்பெயின், மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போட்டிக்குப் பிந்தைய மோதலில், அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் பின்கள வீரர் எரிக் கார்சியாவின் தொண்டையில் தாக்குவது போல் தெரிந்தது

    • எழுதியவர், டேல் ஜான்சன்
    • பதவி, கால்பந்து விவகாரங்கள் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து ஆர்ஜென்டினா விசாரணைக்கு உள்ளாகும் என்பதை ஃபிஃபா உறுதிப்படுத்தியுள்ளது.

மெட்லைஃப் மைதானத்தில் இறுதி விசில் ஊதப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை மதிப்பிடுவதற்கு ஃபிஃபாவின் ஒழுங்குமுறைக் குழு ஒரு ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அறநெறி சார்ந்த வழக்குரைஞரை நியமித்துள்ளது.

இந்த மோதலில் ஈடுபட்ட எந்தவொரு வீரர் அல்லது பயிற்சியாளரும் இடைநீக்கத்தை எதிர்கொள்ளக்கூடும், அதே வேளையில் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் அபராதத்தையும் சந்திக்க நேரிடலாம்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, தங்களது உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிய ஸ்பெயின் வீரர்களுடன் ஆர்ஜென்டினா அணியினர் மற்றும் உதவிப் பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நஹுயல் மோலினா, லியான்ட்ரோ பரீடஸ், தியாகோ அல்மாடா மற்றும் உதவிப் பயிற்சியாளர் ராபர்ட்டோ அயலா ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது போல் தோன்றியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com