பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி? சரியான நேரம் எது? 7 முக்கிய கேள்வி-பதில்கள்
பட மூலாதாரம், Getty Images8 மணி நேரங்களுக்கு முன்னர்செய்திகள் அல்லது பொது விவாதங்கள் மூலம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். ‘வேலையை இழந்த பிறகும் சிலருக்குப் பங்குச் சந்தை எவ்வாறு கைகொடுத்தது’ என்பது போன்ற கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம்.ஆனால், பங்குச் சந்தையில் நேரடியாக வர்த்தகம் செய்வதற்கான மனநிலை பலருக்கு இருப்பதில்லை. பலர் இதைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததாலோ அல்லது அதிக ‘ரிஸ்க்’ எடுக்க விருப்பமில்லாததாலோ இந்த முதலீட்டில் இருந்து விலகி…









