வெற்றி அவசியமான போட்டியில் சரிந்த சென்னை – பிளேஆஃப் வாய்ப்பு பறிபோனது

Share

13.4 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆகி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 13.4 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆகி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 66வது போட்டியில் இன்று (மே 21) குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாக இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே சிஎஸ்கே-வால் 14 புள்ளிகள் பெற்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு வெளியேறியிருக்கிறது சிஎஸ்கே.

குஜராத் டைட்டன்ஸ் அணியோ ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேயிருந்தது. இருந்தாலும், இந்தப் போட்டியின் வெற்றி அவர்களின் டாப் 2 வாய்ப்பை பலப்படுத்தியிருக்கிறது. லீக் சுற்றில், 14 போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்றிருக்கும் டைட்டன்ஸ், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆடுகளத்தில் வேகமும் பவுன்சும் நன்றாக இருப்பதால் முதலில் பந்துவீச முடிவு செய்திருப்பதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டாப் 3 வீரர்களான சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் அனைவருமே அரைசதம் அடித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com