பாஜகவை முந்திய சிஜேபி: கரப்பான் பூச்சி கட்சி பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

Share

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

பட மூலாதாரம், CJP

படக்குறிப்பு, சிஜேபி பகிர்ந்த பல மீம்கள் மற்றும் குறுங்காணொளிகளில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த புகைப்படமும் அடங்கும். இதில் அந்த பகடி கணக்கின் இலச்சினை இடம்பெற்றுள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவில் பொதுவாக அரசியல் கட்சிகள் போராட்டங்களின் மூலம் உருவாகும். ஆனால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எதிர்பாராத விதமாக சமூக ஊடகத்தில் மே 16-ஆம் தேதி அன்று தோற்றுவிக்கப்பட்டது.

ஒரு பகடியான இணைய எதிர்வினையாகவே அது தோற்றுவிக்கப்பட்டது.

மே 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி சூர்யா கன்ட், “அமைப்பைத் தாக்கும் ஓட்டுண்ணிகள் ஏற்கெனவே சமூகத்தில் இருக்கின்றன. நீங்கள் அவர்களுடன் இணைய வேண்டுமா? வேலைவாய்ப்பைத் தேடி தங்களுடைய துறையில் ஓர் இடத்தை பிடிக்க முடியாத இளைஞர்கள் அனைத்து இடங்களிலும் கரப்பான் பூச்சி போல தங்களைப் பரப்பிக் கொள்கின்றனர்.” எனத் தெரிவித்திருந்தார்.

தலைமை நீதிபதி சூர்யா கன்ட் தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த சூர்யா கன்ட் தன்னுடைய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

“ஒரு சாதாரணமான வழக்கில் வாய்மொழியாக தெரிவித்த கருத்துகளை சில ஊடகங்கள் தவறாக சித்தரித்துள்ளதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். சட்டம் போன்ற துறைகளில் போலியான பட்டங்களின் உதவியுடன் நுழைபவர்களையே நான் குறிப்பாக விமர்சித்திருந்தேன். அப்படிப்பட்டவர்கள் ஊடகம், சமூக ஊடகம் மற்றும் இதர மதிப்புமிக்க துறைகளிலும் நுழைந்துள்ளனர். எனவே அவர்கள் ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com