வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் மோதி பத்திரிகையாளர்களின் கேள்விகளை தவிர்ப்பது ஏன்?
பட மூலாதாரம், @narendramodiபடக்குறிப்பு, இத்தாலிப் பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமருடன் மோதி.பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பிரதமர் நரேந்திர மோதி தனது ஐரோப்பியப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் உடன் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போது, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியை வலியுறுத்தினார். இருப்பினும், பிரதமர் மோதி எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.வெளிநாட்டுத் தலைவர்களிடம் கேள்விகள் கேட்பது ஐரோப்பிய நாடுகளில்…
