“அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” – ருதுராஜ் | “We will come back even stronger next year” — Ruturaj Gaikwad

Share

இந்தச் சீசன் மூலமாக எங்கள் பலவீனம் என்னவென்று கற்றுக் கொண்டோம். இந்த இளம் டீமை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, கண்டிப்பாக அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த சீசனில் எம்.எஸ். தோனியைப் பார்க்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ருதுராஜ், “எனக்கே அடுத்த வருடம்தான் தெரியவரும். அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான். எதிரணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபர் அவர்.

தோனி - சிஎஸ்கே

தோனி – சிஎஸ்கே

குறிப்பாக கடைசி ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையும், மொமண்டத்தையும் கிரீஸில் நின்றுகொண்டே மாற்றக்கூடியவர். எனவே, இந்தச் சீசனில் அவரை நாங்கள் மிகவும் மிஸ் செய்தோம் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த சீசனைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது, ஆனால் எங்களிடம் இருந்த வீரர்களைப் பற்றியும், இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றியும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com