“என்.டி.ஏ ஆட்சி அமைக்கும், தி.மு.க நிச்சயம் தோல்வியைத் தழுவும்” – நாகர்கோவிலில் பிரதமர் மோடி |News about nagercoil Narendra modi road show
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்த பிரதமர் மோடி, ஹெலி பேட் தளத்தில் இருந்து காரில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சென்றார். வேப்பமூடு சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மோடி பின்னர் ரோடு ஷோவைத் தொடங்கினார். சாலையின் இருபுறமும் பிரதமர் மோடியை…









