டி20 உலகக் கோப்பையில் ஜொலித்த சஞ்சு சாம்சன் ஏன் இந்திய அணியில் இல்லை? கிரிக்கெட் நிபுணர்கள் அதிருப்தி

Share

சஞ்சு சாம்சன், கிரிக்கெட், ஜிம்பாப்வே சுற்றுப்பயணம், வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட் அணி, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Shubhajit Roy Karmakar/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை

“சஞ்சு சாம்சன் தொடர்பான முடிவைச் சுற்றியுள்ள சூழல் எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது.”

“அவருக்கு ‘ஓய்வு’ அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. நான் நீண்ட காலமாக இத்துறையில் இருப்பதால், ‘ஓய்வு’ என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்.”

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் சஞ்சு சாம்சனின் பெயர் இடம் பெறாதபோது, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஒரு காணொளியில் தனது அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.

“டி20 உலகக் கோப்பையில் செய்த அதே தவறைத்தான் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் செய்து வருகிறது. அப்போது அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்; எதிரணிகள் ஆஃப்-ஸ்பின்னர்களைப் பயன்படுத்தி அவர்களைக் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தன. தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு மாற்றம் ஏற்பட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.”

“இன்னிங்ஸைத் தொடங்க ஒரு வலது கை பேட்ஸ்மேன் கண்டிப்பாகத் தேவை, அந்தப் பணிக்குச் சஞ்சு சாம்சன் மிகச்சரியாகப் பொருந்துகிறார். வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் கொண்ட தொடக்க ஜோடி அவசியம்; எனவே அபிஷேக் அல்லது வைபவ் ஆகியோரில் ஒருவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டியிருக்கும்.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com