2010 முதல் 2016 வரை நடைபெற்ற நான்கு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர்களிலும் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி, 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஆரம்பகட்டப் பயணத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.
2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போராடிக் கொண்டிருந்தது.

கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஷபூர், அழுத்தமான சூழலில் ஒரு பவுண்டரி அடித்து அணியை வரலாற்று வெற்றி பெற வைத்தார். அன்றிலிருந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக திகழ்ந்தார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்த இவர், தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, ஜூலை 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், “ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடித்தளத்தை அமைத்த வீரர்களில் ஒருவராக ஷபூர் ஜத்ரான் என்றும் நினைவுகூரப்படுவார்” என்று புகழாரம் சூட்டியுள்ளது.