சேரமான் பெருமாள் என்ற இந்து மன்னர்தான் இந்தியாவில் இஸ்லாம் பரவ வித்திட்டவரா?

Share

இஸ்லாம், இந்தியா, மதம், பிபிசி
படக்குறிப்பு, அரேபியர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வர்த்தகத்தின் மூலமே, குறிப்பாகக் கறுப்பு மிளகு வர்த்தகத்தின் மூலமே உருவானது; அந்த வர்த்தகத் தொடர்பின் வாயிலாகவே இஸ்லாமும் அறிமுகமானது.

    • எழுதியவர், மிர்சா ஏபி பேக்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

உமையாத் கலீபகத்தின் ஆட்சிக்காலத்தின்போது, கி.பி. 712 இல் முகமது பின் காசிம் சிந்து மீது படையெடுத்தபோது, இஸ்லாம் மதம் வாளின் வலிமையைக் கொண்டுதான் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், பல வரலாற்று ஆசிரியர்கள் இந்த கருத்தை முற்றிலுமாக மறுக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, தெற்காசியாவிலோ அல்லது இந்தியாவிலோ இஸ்லாத்தின் வருகையும் அதன் பிரபலமும் திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல; அது ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் விளைவும் அல்ல. மாறாக, அது பல நூற்றாண்டுகளாக நீடித்த ஒரு நீண்ட வரலாற்று மற்றும் சமூகச் செயல்முறையாகும்.

வரலாற்று ஆசிரியர்களும் சமூகவியலாளர்களும் இந்த செயல்முறையை வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள். மேலும், இதனை விளக்குவதற்கு சில முக்கியமான கோட்பாடுகளை முன்வைக்கிறார்கள். அதில் அமைதியான முறையில் மக்கள் குடியேறியது, வர்த்தகம், சூஃபிக்களின் வருகை, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் என அனைத்தும் அடங்கும்.

இவற்றில் முதலாவது மற்றும் மிக முக்கியமான கோட்பாடு, ‘அமைதியான வர்த்தகம் மற்றும் கடல் வழித்தடங்கள்’ மூலமாக இந்தியாவில் இஸ்லாம் நுழைந்தது என்பதாகும்.

இங்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மசாலாப் பொருட்கள் மற்றும் குறிப்பாக கருப்பு மிளகு வர்த்தகம், இந்தியாவில் இஸ்லாம் வந்தடைவதில் ஒரு முக்கியப் பங்காற்றியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com