Browsing: ஆரோக்கியம் | Health

ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், ரத்த அழுத்தத்தை அறியலாம்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?!| Researchers found smartphone attachment to monitor blood pressure

ரத்த அழுத்தத்தை அறிய, ஃப்ளாஷ் மீது இந்த கருவியை (Clip) பொருத்தி, விரல் நுனியை அதன் மீது வைக்க வேண்டும். ஸ்மார்ட்போன் ஆப் எவ்வளவு நேரம், எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தும். கிளிப்பை அழுத்துகையில், ஸ்மார்ட்போனில் இருந்து ஃப்ளாஷ் லைட் விரல் நுனியின் மீது படும்.அந்த லைட் பின் அளவுள்ள (pin size hole) துளை கொண்ட சேனல் வழியாக கேமராவில் சிவப்பு வட்ட பிம்பமாகக் காட்டும். கிளிப்பை அதிக அழுத்தத்துடன் தொடர்ச்சியாக அழுத்தும்போது…

Chroming challenge: வாசனை திரவியத்தை முகர்ந்ததால் உயிரிழந்த சிறுமி… எச்சரிக்கை பதிவு! | Australian Girl died of chroming challenge

சமூக வலைத்தளங்களில் பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது, ஐஸ் பக்கெட் என ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது டிரெண்டாகி வருவது தான், க்ரோமிங் சேலஞ்ச் (chroming challenge).இந்தச் சவாலை ஏற்கும் ஒருவர், வாசனைத் திரவியங்களை மோந்து பார்க்க வேண்டும். கேட்பதற்கு இந்த சேலஞ்ச் வேடிக்கையாக இருந்தாலும், இதில் பல ஆபத்துகள் மறைந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.இந்த சேலஞ்சை மேற்கொண்ட 13 வயது ஆஸ்திரேலிய சிறுமி எஸ்ரா ஹெய்ன்ஸ் உயிரிழந்துள்ளார். இவர் வாசனைத்…

Doctor Vikatan: படுக்கையில் சிறுநீர் கழிக்கும் 6 வயதுக் குழந்தை… தொடருமா, சரியாகுமா? | Doctor Vikatan: 6 year old bed-wetting…

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 வயதாகிறது. இன்னமும் வாரத்தில் சில நாள்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் தொடர்கிறது. இதனால் வெளியூர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ போகவே தயக்கமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்…. தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் பிறந்த குழந்தைகள் எல்லோரும் குறிப்பிட்ட வயது வரை படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயல்பானது.…

Pregnancy-க்கு அப்புறம் 90% Women இத பண்ண மாட்றாங்க! – Dr Sandhya Explains | Loose Vagina Tightening

Published:31 May 2023 6 PMUpdated:31 May 2023 6 PMHere in this Video Dr Sandhya Vasan – Sr Consultant In Obstetrics & Gynaecology talks about vagina tightening procedures for women. she also talks about the reasons for loose vagina, using menstrual cups, vaginal bleaching and much more. Source link

640 கிராமில் பிறந்த குழந்தை: மருத்துவகண்காணிப்பில் 1 கிலோ எடைவரை வளர்த்து அரசு மருத்துவர்கள் சாதனை! | Virudhunagar medical College government doctors achievements

வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் வனிதா – மாரிமுத்து தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான வனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அவருக்குக் கடந்த மார்ச் 14ம் தேதி, 26 வாரங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நிலையில் 640 கிராம் எடை அளவில் பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. இதையடுத்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணியின் அறிவுரையின்படி, எடை குறைவாக பிறந்த அக்குழந்தை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டது.மருத்துவக்குழுகுழந்தையின் எடை வளர்ச்சிநிலையை கண்காணிக்கத்…

`150 வயது வரை வாழ்வேன்!' – நடிகர் சரத்குமார் சொல்வது சாத்தியமா? மருத்துவ விளக்கம்

அண்மைய்ல், மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில், “எனக்கு 69 வயதாகிறது. இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை வாழ்வேன். இத்தனை நாள்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான வித்தைகளைக் கற்று வைத்துள்ளேன். அந்த வித்தையை 2026-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அரியணையில் ஏறும்போது சொல்வேன்” என்று பேசியுள்ளார். நடிகர் சரத்குமாரின் இந்தக் கருத்து சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.சரத்குமார் காலை 6 மணிக்கு எழுவார்;…

குழந்தைகளை பாதிக்கும் தாழ்வெப்பநிலை… என்ன காரணம்?| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 23 | Hypothermia Affects Children… What Causes It?

பச்சிளங்குழந்தைகளில் வெப்ப இழப்பு நிகழும் முறைகள்:வெப்பக் கடத்தல் (Conduction): குழந்தைக்கு குளிரான உடையை உடுத்தும்போது அல்லது குளிரான பகுதியின் மேல் குழந்தையைக் கிடத்தும்போது, குழந்தையில் உடல் வெப்பம் குளிரான உடை அல்லது பகுதிக்கு கடத்தப்பட்டு, குழந்தைக்கு வெப்ப இழப்பு ஏற்படும்.வெப்பச் சலனம் (Convection): ஏசி, மின்விசிறியிலிருந்து வெளிப்படும் குளிர் காற்று, குழந்தையின் உடலின் மீது படும்போது, வெப்பச் சலனத்தின் காரணமாக, குழந்தைக்கு வெப்ப இழப்பு ஏற்படும்.கதிர்வீச்சு (Radiation): குழந்தைக்கு அருகாமையில் குளிரான பொருள் இருக்கும்போது, குழந்தையின் உடலில்…

கர்ப்ப காலத்தில் மிளகு, மஞ்சள் பால் அவசியமா… மருத்துவர்கள் சொல்வதென்ன? | Is pepper and turmeric milk necessary during pregnancy?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தன் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பது பல ஆண்டுக் காலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. கர்ப்பகாலம் என்பது தாய்க்கு மட்டுமன்றி சேய்க்கும் முக்கியமான காலம். எனவே, கர்ப்ப நாள்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். சளி, இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் தங்கள் உடம்பில் எந்தவொரு கோளாறும் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. பித்தம், சூடு போன்றவை அதிகம் இல்லாமல் சீராக வைத்திருப்பது, குழந்தையின்…

பெண்களே உஷார்… அதிகரித்து வரும் எம்.எஸ் பாதிப்பு; காரணமும் தீர்வும்! #WorldMultipleSclerosisDay

வேகமாக முன்னேறி வரும் மருத்துவ வளர்ச்சி, வாழ்நாள் மீதான நம்பிக்கையையும், நோய்களுக்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்துகின்றன. அந்த வகையில், மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அதிக அளவில் காணப்பட்ட `Multiple Sclerosis’ எனப்படும் நரம்பியல் நோய், மருத்துவ முன்னேற்றத்தால் சமீப காலமாக இந்தியாவிலும் பரவலாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. Multiple SclerosisDoctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள், நரம்பு மண்டலத்தின் வழியாகவே உடல் உறுப்புகளின் தசைகளுக்குச் சென்று சேரும். உடல் இயக்கத்தில்…

40 சூயிங்கம் விழுங்கிய 5 வயது சிறுவன்… பதறிய பெற்றோர்; எச்சரிக்கும் மருத்துவர்கள்! |5 year old boy swallows 40 chewing gum

சூயிங்கம், ஏழு ஆண்டுகளாக உடலில் சிக்கியிருக்கும் என முன்பெல்லாம் எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அரிதான நிகழ்வுகளில் மட்டுமே இப்படி நிகழும் என விளக்கமளித்துள்ளனர். இது குறித்து உணவியல் நிபுணர் பெத் செர்வோனி கூறுகையில், “நீங்கள் ஒரு சூயிங்கத்தை விழுங்கியிருந்தால், அது 40 மணி நேரம் கழித்து உங்கள் மலம் வழியே வெளியேறும். ஏனெனில் அதனைச் செரிக்க முடியாததால், அது முழுவதுமாக வெளியேறுகிறது. ஆனால், சிறிதளவு சூயிங்கத்தை அவ்வப்போது விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. இதனை ஜீரணிக்க…

1 78 79 80 81 82 211