Browsing: ஆரோக்கியம் | Health

மே மாதத்துடன் நிறைவடையாது கோடை… பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?

2015-ம் ஆண்டுக்குப் பிறகு, கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் இறப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் வருடத்தின் சராசரி வெயில் காலம் நீண்டு வருவதாகவும் ஆய்வு முடிவுகள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன. எனவே, மே மாதத்தோடு கோடை கழன்று சென்றுவிடுமென நினைக்காமல் ஒவ்வொருவரும் வெயிலின் கடும் பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். summerவியர்க்குரு, உடல் உஷ்ணம், வெப்ப மயக்கம்… கோடைகால உபாதைகளைத் தவிர்ப்பது எப்படி? #SummerTipsஅதிக பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்ஆண்களைவிட பெண்களுக்குதான்…

இளவயது மாரடைப்பு: `உட்கார்ந்தே இருப்பது பல நோய்களுக்குக் காரணம்' – தீர்வைச் சொல்லும் மருத்துவர்

சமீபத்தில், நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததுவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்க, குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் கோவினி பாலசுப்பிரமணி கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பு; மைதானத்திலேயே பிரிந்த உயிர்; ஒன்றரை மாதத்தில் 8வது நிகழ்வு! இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும்…

Doctor Vikatan: தயிரா… மோரா… யாருக்கு எது பெஸ்ட், ஏன்?

Doctor Vikatan: தயிர் சூடு, மோர் குளிர்ச்சி என்கிறார்களே… இரண்டுமே பாலில் இருந்து பெறப்படுவது தானே. அப்படியிருக்கையில் ஏன் இந்த வேறுபாடு? யார் தயிர் எடுத்துக் கொள்ளலாம், யார் மோர் எடுத்துக்கொள்ளலாம்? எப்போது, எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிநீங்கள் கேட்டது போல தயிர், மோர் இரண்டுமே பாலில் இருந்து பெறப்படுபவை தான். ஒரு பொருளில் இருந்து பல உப பொருள்கள் பெறப்படலாம். அந்த…

`ஊர்ல இருந்து விலக்கி வெச்சிருக்காங்க அய்யா’ – கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுமி! | girl complained to nagai collector

தங்கள் ஊரில் உள்ள நற்பணி கழகத்தினர் 3 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக ஒரு சிறுமி, கலெக்டரிடம் புகார் அளித்தது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளதுநாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் தேவநதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வா்கிஸ் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார். அப்போது பெருங்கடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கலெக்டருக்கு சால்வை அணிவித்து, தான் கொண்டு வந்த மனுவையும் கொடுத்தார். பின்னர் அவர் கலெக்டரிடம்,…

நோயாளிகளுக்கு தொற்று பாதிப்பா… இந்திய கண் சொட்டுமருந்தால் மீண்டும் சர்ச்சை; என்ன நடந்தது? |Indian made eye drops linked to infection in Sri Lanka

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்து, இலங்கை மருத்துவமனைகளில் 30 -க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையைத் தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாதம் நோயாளிகளுக்குக் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு ப்ரெட்னிசோலோன் (Prednisolone Eye drops) கண் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சொட்டு…

ஒவ்வொரு சிகரெட்டிலும் இனி புகையிலை எச்சரிக்கை வாசகம்; கனடாவின் புதிய முன்னெடுப்பு!|Each Canadian cigarette will soon carry a health warning

உலகில் முதல் முறையாக, சிகரெட்டுகளில் எச்சரிக்கை லேபிளை அச்சிட உள்ளதாக கனடா அரசின் சுகாதார அமைப்பு  அறிவித்துள்ளது. ஏற்கெனவே சிகரெட் பாக்கெட்டுகளின் அட்டையில் எச்சரிக்கை வாசகங்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு சிகரெட்டிலும் அதனை அச்சிட முடிவு செய்துள்ளது. புதிதாக அச்சடிக்கப்பட உள்ள சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும், `புகையிலை புற்றுநோயை உருவாக்கும்’, `உள்ளிழுக்கும், வெளியிடும் ஒவ்வொரு புகையிலும் விஷம் உள்ளது’ போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட உள்ளன. இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை, ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.…

ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருள்கள்…. எவை, ஏன்? | #VisualStory

Fridge நம்மில் பலரும் வீட்டில் ஃபிரிட்ஜுக்குள் பால், காய்கறி, பழம், உணவு என எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருள்களை வைத்துவிடவே நினைப்போம். முட்டைஃபிரிட்ஜுக்குள் எந்தப் பொருள்களை வைக்கலாம், எவற்றை வைக்கக் கூடாது, எவ்வளவு நாள் வைக்கலாம் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். cooking சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடேற்றிச் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. மீண்டும் சூடேற்றப்படும்போது சில உணவுகள் சத்துகளை இழப்பதுடன், நேரங்களில் ஆபத்தானதாகவும் ஆகிவிடலாம். பூண்டுபூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, தேன்…

Doctor Vikatan: பல வருடமாகத் தொடரும் இன்ஹேலர் உபயோகம்… அடிக்ஷனாக மாற வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 70 வயதாகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உள்ளவர் என்பதால் இன்ஹேலர் உபயோகிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. இன்ஹேலர் உபயோகிப்பது அடிக்ஷனாக மாறிவிடாதா… சில நேரங்களில் இன்ஹேலர் உபயோகித்தாலும் அவருக்கு உடனடியாக வீஸிங் சரியாவதில்லை. அப்படியானால் இன்ஹேலர் பலன் தரவில்லை என அர்த்தமா? இன்ஹேலருக்கு பதில் நெபுலைஸர் உபயோகிக்கலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதிநுரையீரல் மருத்துவர் திருப்பதிஇன்ஹேலர், நெபுலைஸர் இரண்டும் வேறு வேறு கிடையாது. மருந்தை காற்றோடு…

`புகையிலை விளம்பர வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்காதது இதற்காகத்தான்’ – மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர் | Sachin Tendulkar says my father told me never to promote tobacco products

லெஜெண்ட் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், தனக்குப் புகையிலை விளம்பர வாய்ப்புகள் வந்தபோதும் அதில் நடிக்கவில்லை என, நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். மகாராஷ்டிர அரசின் ஸ்வச் முக்ஹ் அபியான் (Swachh Mukh Abhiyan) என்ற `வாய் சுகாதார பிரச்சாரம்’ செவ்வாய்க் கிழமையன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், `ஸ்மைல் அம்பாசடர்’ (Smile Ambassador)’ என்று சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டார்.Tobacco (Representational Image)Photo by Khai Nguyen on Unsplashஇந்த நிகழ்வில் பேசிய சச்சின் டெண்டுல்கர், “நான் இந்தியாவிற்காக விளையாடத் தொடங்கியபோது,…

Toned, Skimmed, Full Cream Milk… ஆவின் பால் பாக்கெட் கவர்களின் அர்த்தம் தெரியுமா?|#Visual Story

காலையில் எழுந்ததும் நாம் அனைவரும் அன்றாடம் நுகரும் பொருள்களுள் முக்கியப் பங்கு வகிப்பது பால். பால், பால் பொருள்களின் சிறப்பம்சங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக பால் தினம் கொண்டாட வேண்டும் என்று 2001-ம் ஆண்டு ஐ.நா அறிவித்தது.இதனையடுத்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.ஆவின் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் Toned, Full Cream Milk எனப் பலவாறு வகைப்படுத்தப்பட்டிருக்கும். அதன் அர்த்தம் என்ன?கால்நடை நாம் வாங்கும் அனைத்து பால்களிலுமே…

1 77 78 79 80 81 211