இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 63 வயது நபருக்கு ஏற்பட்ட புரோஸ்டேட் வீக்கத்தை, HoLEP லேசர் சிகிச்சை மூலம் துரிதமாக குணப்படுத்தியுள்ளது, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை.
சென்னையைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவருக்கு, கடந்த மே மாதம் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சிகிச்சை முடிந்த சில நாள்களுக்குப் பின், அவருக்கு சிறுநீர்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் புரோஸ்டேட் வீக்கம் ஏற்பட, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த அவருக்கு, மருத்துவர்கள் மாத்திரைகளைப் பரிந்துரைத்துள்ளனர்.
இருப்பினும் தொற்று அதிகரித்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர் குழு, அவரைப் பரிசோதித்தது. மருத்துவர் ஜீவகன் தலைமையிலான குழு, அந்த நபருக்கு HoLEP(Holmium laser enucleation of the prostate) லேசர் சிகிச்சையை மேற்கொண்டு, அவரை விரைவில் குணப்படுத்தியுள்ளது.