அமெரிக்காவில் சாதி பாகுபாட்டிற்கு எதிராக மசோதா நிறைவேற்றிய செனட் உறுப்பினருக்கு கொலை மிரட்டலை – ஏன்?

Share

கலிபோர்னியா சாதி பாகுபாடு சட்டம்

பட மூலாதாரம், PREM PARIYAR

படக்குறிப்பு,

கலிஃபோர்னியா மாகாண சட்ட மேலவையில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசும் செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப்

சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது.

கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இதுகுறித்து உரையாடினார்.

கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் சுக்ஜிந்தர் கவுர். நோயாளிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இரவு, பகல் பாராமல் உழைத்து வரும் இவர், “தாம் மிகுந்த அடக்குமுறைக்கு ஆளாகிறோம் என்ற எண்ணம், ஓய்வு நேரங்களில் எல்லாம் தமக்கு எழுகிறது” என்கிறார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், தெற்காசியாவை சேர்ந்த சக பணியாளர்களிடம் சாதிரீதியான அவமானங்களை அடிக்கடி சந்திக்க நேரிடுவதாகக் கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com