நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி… கைதட்டி வாழ்த்திய இத்தாலி சபை உறுப்பினர்கள்!|Italian MP breastfeeds son in parliament

Share

இத்தாலியின் நாடாளுமன்ற உறுப்பினரான கில்டா ஸ்போர்ட்டியெல்லோ (Gilda Sportiello) புதன்கிழமையன்று நாடாளுமன்ற சபைக்கு, கைகுழந்தையான ஃபெடரிகோவுடன் (Federico) சென்றுள்ளார். அப்போது நாடாளுமன்ற சபையில் தன்னுடைய குழந்தைக்குப் பால் கொடுத்துள்ளார்.

அப்போது, சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி அவரின் மகன் ஃபெடரிகோ “நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும்” என்று வாழ்த்தி உள்ளார்கள்.

நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி!

நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி!

இத்தாலியின் நாடாளுமன்ற குழு, நவம்பர் மாதம் பெண் எம்.பி – க்கள் ஒரு வயது வரை உள்ள தங்கள் குழந்தைகளோடு நாடாளுமன்ற சபைக்கு வரலாம், அதோடு அவர்களுக்கு தாய்பால் கொடுக்கலாம் என்றும் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தன்னுடைய கைகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திருக்கிறார், கில்டா. `பல பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை முன்கூட்டியே நிறுத்துகிறார்கள். விருப்பப்படி அல்ல, மாறாக அவர்கள் பணியிடத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தினால் இப்படிச் செய்கிறார்கள்’ என கில்டா ஸ்போர்ட்டியெல்லோ தெரிவித்துள்ளார்.  இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com