‘பாடலின் முதல் வரிகளில் அர்த்தமே இருக்காது’ – விஜய் ஆண்டனி உடனான அனுபவம் பகிரும் பிரபலங்கள்

Share

விஜய் ஆண்டனி பிறந்தநாள்

பட மூலாதாரம், ThinkMusicIndia/YT

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழின் முதல் நாவல் என்று போற்றப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரனான இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று.

திருச்சியில் பிறந்து வளர்ந்த விஜய் ஆண்டனி, அரசு ஊழியரான தந்தையின் திடீர் மறைவுக்குப் பின் திருநெல்வேலியில் குடியேறினார். பள்ளியில் படிக்கும்போது அவருக்கு இசை மீது ஆர்வம் ஏற்பட்டு பின்னாளில் இசைமைப்பாளராக மட்டுமின்றி நடிப்பு, இயக்கம் போன்றவற்றிலும் தடம் பதித்துள்ளார்.

நாக்கமுக்கா பாடல்

விஜய் ஆண்டனி கல்லூரிக் காலத்தில் சவுண்ட் இஞ்சினீயராக பணியாற்றிக் கொண்டே பகுதி நேரமாக இசை கற்றுக் கொண்டார். மாதம் 600 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு தனக்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்கி வீட்டையே மினி ஸ்டூடியோவாக மாற்றினார்.

அவரது இயற்பெயர் பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா. ஆரம்பத்தில் மணிரத்னம், படத்திற்கு இசையமைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் வந்த நேரத்தில், “சின்ன பாப்பா பெரிய பாப்பா, காதலிக்க நேரமில்லை, கனா காணும் காலங்கள் ஆகிய சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி

பட மூலாதாரம், SunMusic/Youtube

படக்குறிப்பு, விஜய் ஆண்டனியின் இசையில் உருவான நாக்க முக்கா பாடல்

வெள்ளித் திரையில் இயக்குநர் சசி இயக்கத்தில் டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com