இந்தத் தகவல் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்குத் தெரியவந்ததும், சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். சந்தானம், வேண்டா ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரண்டு குடும்பத்தினரிடமும் விசாரித்தபோது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். சந்தானத்தின் மதுப்பழக்கத்தால் அவரின் குடும்பம் சீரழிந்துவிட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அடிக்கடி தகராறில் ஈடுபட்டு துன்புறுத்திய கணவனை கர்ப்பிணி மனைவி கல்லைப் போட்டு கொலைசெய்ததோடு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.