குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கிட வேண்டும் அல்லது குறைந்தது 30- 60 நிமிடங்களில் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்துவிட வேண்டும். தாய்ப்பாலை குழந்தை பிறந்தவுடன் விரைவாக அளிப்பதன் மூலம், குழந்தைக்கு போதுமான கலோரிகள் கிடைக்கும்; அதன்மூலம், தனது உடல்வெப்பத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். முதலில் கிடைக்கும் சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடனே அழுதுவிடும். ஆனால் பிறந்தவுடன் குழந்தை அழவில்லை என்றால், உடனடியாக குழந்தையை ரேடியன்ட் வார்மருக்கு மாற்றி resuscitation-ஐ தொடங்கிவிட வேண்டும். Resuscitation-இன் போது, நன்றாக உலர்ந்த துணிகள், கதகதப்பான உபகரணங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
குளிரான துணிகளோ உபகரணங்களோ கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. குழந்தை பிறப்பதற்கு 15- 30 நிமிடங்கள் முன்பே ரேடியன்ட் வார்மரை (radiant warmer) சுவிட்ச் ஆன் செய்து, 100% ஹீட்டர் வெளியீட்டில் (in manual mode), அதன் கீழ் resuscitation-க்கு தேவைப்படும் துணிகள் மற்றும் உபகரணங்களை வைத்திருப்பதன் மூலம் அவற்றை கதகதப்பாக வைத்திருக்க முடியும்.
அடுத்த அத்தியாயத்தில் குழந்தைக்கு தாழ்வெப்பநிலை ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய மீதமூள்ள 5 வெப்ப பாதுகாப்பு வரைமுறைகளை விரிவாகக் காணலாம்.
பராமரிப்போம்…