இயக்குநர் மகேந்திரன் படைப்பில் பெரிதும் பேசப்பட்ட 7 கதாபாத்திரங்கள் எவை?

Share

இயக்குநர் மகேந்திரன், பிறந்தநாள்
படக்குறிப்பு, இயக்குநர் மகேந்திரன் (கோப்புப் படம்)

உங்களுக்குப் பிடித்த டாப் 5 தமிழ் பட இயக்குநர்கள் பெயரைச் சொல்லுங்கள் என்று தமிழ்த் திரையுலகில் யாரிடம் கேட்டாலும், அதில் பெரும்பாலும் இயக்குநர் மகேந்திரனின் பெயரும் இடம் பெற்றிருக்கும்.

முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘நண்டு’, ‘மெட்டி’, ‘அழகிய கண்ணே’, ‘கை கொடுக்கும் கை’, ‘கண்ணுக்கு மை எழுது’, ‘ஊர்ப் பஞ்சாயத்து’, ‘சாசனம்’ உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.

26 படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 14 படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். 27 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். விஜய் நாயகனாக நடித்த தெறி உள்பட 10 படங்களில் நடித்துள்ளார்.

எம்ஜிஆரின் பாராட்டு

1958-ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவரான மகேந்திரன், அன்றைக்கு விருந்தினராக வந்த எம்ஜிஆர் முன்னிலையில் காதல் பற்றியும் தனது சினிமா காதல் பற்றியும் பேசிய பேச்சு வரவேற்பை பெற்றது.

மகேந்திரன் பேச்சைக் கேட்டு, மாணவர்களையும் கைத்தட்ட சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர். விழா முடிந்து செல்லும்போது “நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன் கூடிய உண்மையான உணர்ச்சியுடன் கூறிய விளக்கம். சிறந்த விமர்சகராகத் தகுந்தவர். வாழ்க! தங்கள் அன்பன் – எம்.ஜி. ராமச்சந்திரன்” என்று தனது கைப்பட ஒரு பேப்பரில் எழுதி மகேந்திரன் சட்டைப்பையில் திணித்துச் சென்றிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com