ஆனால், ‘அவசரப்பட்டு சந்தேகப்பட்டுட்டீங்களே சார்..’ என்பதைப் போல இருந்தது சென்னை அணியின் பௌலிங். ‘அங்குட்டு வேணாம். இங்குட்டு போவோம்’ என்பதைப் போல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் ஸ்பின்னரான அகீல் ஹூசைனை வைத்து அட்டாக்கை ஆரம்பித்தார் ருத்துராஜ். கடந்த மூன்று ஆண்டுகளின் ருத்துராஜின் கேப்டன்சி க்ரைண்டர் முதல் முறையாக ஓடியதைப் போல தெரிந்தது. மலேவர், நமன் தீர், சூர்யகுமார், திலக் வர்மா என முக்கிய விக்கெட்டுகள் எல்லாவற்றையும் வீழ்த்தினார் ஹூசைன். ‘பந்தயத்துக்கு நாங்க வரலாமா..’ என முக்கியமான கட்டத்தில் ஹர்திக் மற்றும் ரூதர்போர்டின் விக்கெட்டை நூர் வீழ்த்தினர். ‘வான்கடேல மும்பைக்காரன் சுழலுவானா பதிலுக்கு நாங்க சுழலட்டுமா…’ என சேலஞ்ச் செய்து ஹூசைனும் நூரும் விக்கெட்டுகளை அள்ளியதைப் போல இருந்தது. மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்.

சென்னை அணியை சென்னை ரசிகர்களே கடந்த சில நாட்களாக காதுகள் கருகிப் போகுமளவுக்கு திட்டியிருந்தாலும், நேற்று ‘போடி…என் புள்ளைக்கு ஹீரோ ஹோண்டால வேலை கிடைச்சிருக்கு’ என்கிற ரேஞ்சில் எமோஷனல் ஆகி பீல் செய்து கொண்டிருந்தனர். ரொம்ப பீல் பண்றானுகளே அடுத்த மேட்ச்ல ஒரு பாயாசத்தை போட்ற வேண்டிதான் என சென்னை அணி நினைக்காமல் இருந்தால் சரி.
முகத்தை மூடிக்கொண்டு மைதானத்தை விட்டு நீதா அம்பானி வெளியேறுகையில், லோனேஷ் லனகராஜ் என்கிற ரிப்போர்ட்டர் மைக்கை நீட்டி ‘மாற்றம் வருமா மேடம்…’ எனக் கேட்க, ‘மாற்றம் வந்ததுனாலதாண்டா இவ்வளவு அடி’ என குறியீடோடு பேசிச் சென்றிருக்கிறார்.