Browsing: அரசியல்

அதிமுக சார்பில் 10, 11, 12ல் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் 7ம் தேதி வரை மற்றும் 10,11,12 ஆகிய 6 நாட்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சட்டமன்ற தொகுதிகளிலும், பிற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இன்று முதல் 7ம் தேதி வரை நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கான பட்டியல், கடந்த பிப். 26ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள்…

கல்விக்கும், மருத்துவத்துக்கும் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கரூர்: கல்விக்கும், மருத்துவத்துக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கரூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு ரூ.267 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்த ஆட்சியில் கல்விக்கும், மருத்துவத்துக்கும்…

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி அதிமுகவுடன் ஓபிஎஸ் மோதி பார்க்கட்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதி திட்டமிட்டு, நம் இயக்கத்தை காக்க போராடி வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தனது அறிக்கையில் விரக்தியின் உச்சியில் உளறியுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிடம் இருந்து தட்டிப்பறித்த வெற்றியை, இந்த துரோகி கொண்டாடுவது…

யாருக்குமே உண்மையாக இல்லை அதிமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை: ‘யாருக்குமே உண்மையாக இல்லாத அதிமுகவை மக்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உயர்நீதிமன்ற உத்தரவின் படி அனுமதி இல்லாமல் இயங்கக்கூடிய செங்கல்சூளைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.  செங்கல் உற்பத்தி பாதிக்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருவாய் துறை ஆவணங்களை சமர்ப்பித்து மின் இணைப்பு கேட்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. கோடை காலங்களில் மின்சாரம் தொடர்பாக எந்த…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தற்போது ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா, டிடிவி தினகரன் அணி என்று 4 பிரிவாக இருந்து வருகிறது. தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் எல்லாரும் ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. அணியில் இருக்கிறார்கள். வடமாவட்டம், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் மட்டும் தான் எடப்பாடி அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேற்கு மாவட்டம் என்பதால் நாம் நின்றே ஆக…

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமோக வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் இளங்கோவன்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆகியோரை ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 62,233 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று காலை அவர், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு…

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி எடப்பாடி என்கிற துரோகியை மக்கள் ஏற்கவில்லை: ஓபிஎஸ் காட்டமான அறிக்கை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்  கொள்ளவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாறு காணாத படுதோல்வியை அதிமுக அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் கட்சிக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை துரோகங்கள்தான். 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

சொல்லிட்டாங்க…

* இன்றைய இந்தியா புதிய வேலை கலாச்சாரத்தை நோக்கி செல்கிறது. பிரதமர் மோடி* கேரளாவிலும் ஆட்சியை பிடிப்போம் என்று மோடி கூறியது அவரது எல்லை மீறிய ஆசை. பாஜவின் எந்த திட்டமும் பலிக்காது. கேரள முதல்வர் பினராயி விஜயன்* பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எனது செல்போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பழனிசாமியின் பிடியில் ஜெயலலிதா, எம்ஜிஆரின் இயக்கம் இருக்கிறது. இதனால் இரட்டை இலை சின்னமும்,…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்தார். இந்த சந்திப்பில் காங்கிரஸ், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை காங்கிரஸ் கட்சியினர், திமுகவினர் ஆகியோர் நேற்று முதல் பிரமாண்டமாக கொண்டாடிவருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை 66,233 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ.வாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளார். இந்நிலையில் இன்று…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன்? என்பது குறித்து   பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தற்போது ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா, டிடிவி தினகரன் அணி என்று 4 பிரிவாக இருந்து வருகிறது. தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் எல்லாரும் ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. பின்னால் இருக்கிறார்கள். வடமாவட்டம், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் மட்டும் தான் எடப்பாடி அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் மேற்கு மாவட்டம் என்பதால்…

1 13 14 15 16 17 161