‘விசைத்தறியாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம்’; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் 11ம் தேதி பாராட்டு விழா: மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள்
கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுதினம் பாராட்டு விழா நடக்கிறது. அன்றையதினம் அதிமுக உள்பட மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (11ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, பீளமேடு விமான நிலையத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு),…









