தமிழ்நாட்டில் கவனம் பெறும் பிக்கிள்பால்… கோலாகலமாகத் தொடங்கியது TNPPL சீசன் 2!| TNPPL Pickleball Season 2 Begins in Tamil Nadu

Share

தமிழ்நாட்டில் பிக்கிள்பால் (Pickleball) விளையாட்டைத் தொழில்முறை அளவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், “Cavin’s Tamil Nadu Pickleball Premier League (TNPPL) – Season 2′-ன் தொடக்க விழாவும், வீரர்கள் ஏலமும் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் விக்ரம், லீக் இயக்குநர் கே.யோகேஷ், தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கத் தலைவர் கே.மோகித் குமார், செயலாளர் டாக்டர் காவ்யா சோமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், லீக்கின் கோப்பை, அதிகாரபூர்வ இணையதளம், கீதம் ஆகியவை வெளியிடப்பட்டன. மேலும், 12 அணிகளுக்கான வீரர்களும் ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

பிக்கிள்பால்: அறிமுகமும் எழுச்சியும்

டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் அம்சங்களை ஒருங்கிணைத்து, சிறிய மைதானத்தில் பேடிலும் துளைகளைக் கொண்ட பிளாஸ்டிக் பந்தையும் பயன்படுத்தி விளையாடப்படும் பிக்கிள்பால், உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக இதற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக TNPPL நடத்தப்பட்டு வருகிறது.

சிறப்பாக நடந்த தொடக்க விழா!

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் சியான் விக்ரம், கே.யோகேஷ், கே.மோகித் குமார், டாக்டர் காவ்யா சோமேஷ் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து வரவேற்புரை மற்றும் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து TNPPL சீசன் 2-க்கான அதிகாரபூர்வ கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. www.tnppl.com இணையதளமும், லீக்கின் அதிகாரபூர்வ கீதமும் வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகளும், அவற்றின் உரிமையாளர்களும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com