மார்க் ஜுக்கர்பெர்க் இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டது ஏன்?

Share

மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் (CSAM), டீப்ஃபேக் மற்றும் தங்கள் தளங்களை நிர்வகிப்பதில் நடந்த ‘தவறுகள்’ குறித்து மார்க் ஜுக்கர்பெர்க், இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகப் பிபிசிக்கு சில வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து பிரதமர் மோதியின் வீடியோவைச் சிறிது நேரம் நீக்கியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என, நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு வலியுறுத்திய நேரத்திலேயே மார்க் ஜுக்கர்பெர்க்கிடமிருந்து இந்தப் பதில் வந்துள்ளது.

இந்தியாவில் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கத்தைப் (CSAM) பரப்பும் விளம்பரங்களை வெளியிடுவதாக, கடந்த மாதத்தில் பிபிசி ஐ நடத்திய புலனாய்வு ஒன்றில் தெரிய வந்தது.

இந்த புலனாய்வு செய்தி வெளிவந்த பிறகு, மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி, அந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்குமாறு அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.

பிபிசிக்கு இந்தத் தகவல் நம்பகமான வட்டாரங்கள் மூலம் கிடைத்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com